18 எம்எல்ஏக்கள் தகுதி இழப்பு  வழக்கு...புதிய நீதிபதி முன்பு இன்று விசாரணை !!!

Asianet News Tamil  
Published : Oct 04, 2017, 08:18 AM ISTUpdated : Sep 19, 2018, 01:15 AM IST
18 எம்எல்ஏக்கள் தகுதி இழப்பு  வழக்கு...புதிய நீதிபதி முன்பு இன்று விசாரணை !!!

சுருக்கம்

18 mla dismiss case trail wil come in chennai high court

டி.டி.வி.தினகரன் ஆதரவு, 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதியிழப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, புதிய நீதிபதி ரவிச்சந்திர பாபு  முன், இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த  வழக்கில்  புதிய  மனுக்கள்  எதுவும்  தாக்கல் செய்யப்பட்டால்  இறுதி விசாரணை தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக  தெரிகிறது. 

தசரா விடுமுறைக்கு முன், நீதிபதி துரைசாமி விசாரித்த வழக்குகள், தற்போது, நீதிபதி ரவிச்சந்திரபாபுவுக்கு மாற்றப்பட்டுள்ளன. எனவே,  டி.டி.வி.தினகரன்  ஆதரவு 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதியிழப்பு வழக்கு, திமுக  செயல்  தலைவர்  மு.க.ஸ்டாலின்  தொடர்ந்த வழக்கு   ஆகியவை  நீதிபதி ரவிச்சந்திரபாபு முன், இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வழக்கில் சபாநாயகர், சட்டசபை செயலர், கவர்னர் செயலர் தரப்பில், பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும்.  இந்த வழக்கு  இன்று விசாரணைக்கு வரும்போதுதான் ,  யார் யார் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர் என்ற, விபரங்கள் தெரிய வரும்.

இவ்வழக்கில், இரு தரப்பிலும், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் கபில்சிபல், சல்மான் குர்ஷித், துஷ்யந்த் தவே, வைத்தியநாதன், அரிமா சுந்தரம் உள்ளிட்டோர் வாதாட உள்ளனர்.

முதல் கட்டமாக, இன்று விசாரணையை துவங்யகிய பின், மூத்த வழக்கறிஞர்களின் வசதியைப் பொறுத்து, இறுதி கட்ட விசாரணைக்கு, தேதி குறிக்கவும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

PREV
click me!

Recommended Stories

கே.என். நேரு வழக்கில் ஊமையாக இருப்பது ஏன்..? - லஞ்ச ஒழிப்புத் துறையின் முகமூடியைக் கிழித்த நீதிமன்றம்..!
உதயசூரியனில் நிற்க மாட்டோம்.. தனிச் சின்னமே எங்களின் அடையாளம்..! திமுக கூட்டணியில் விசிக அதிரடி..!