
இசையமைப்பாளர் இளையராஜா அய்யராக முயற்சி செய்கிறார் என்றும், அவர் தனது மூலத்தை மறந்துவிட்டு வேஷம் போடுகிறார் என்றும் இயக்குநர் பாராதிராஜா கடுமையாக தாக்குப் பேசியுள்ளார்.
அண்மையில் மத்திய அரசு இளைஞானி இளையராஜாவுக்கு இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருது வழங்கி கௌரவித்தது. இது குறித்து செய்தி வெளியிட்ட நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ், இளையராஜா ஒரு தலித் என்பதால்தான் பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டதாக சர்ச்சை கருத்தை தெரிவித்திருந்தது.
இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் அந்த பத்திரிக்கை செய்தி வெளியிட்டதற்கு விளக்கம் அளித்து மன்னிப்புக் கேட்டது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் பாரதிராஜா, இளையராஜா தனது மூலத்தை மறந்துவிட்டு வேஷம் போடுகிறார் என குற்றம்சாட்டினார்.
தான் எந்த மண்ணில் பிறந்தோம் என்பதை அவர் மறந்துவிடக்கூடாது என்றும், பிறந் மண்ணின் பெருமையைப் பேசுவதே சிறந்தது என்றும் பாராதிராஜா கூறினார்.
இளையாராஜா ஐயராக மாற நினைப்பதாகவும், அதனால்தான் ஆங்கில பத்திரிக்கை, அவர் தலித் என்பதால்தான் பத்மவிபூஷன் வழங்கப்பட்டதாக கருத்துத் தெரிவித்திருந்ததாக கூறினார்.
இளையராஜா சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டவர் என்றும் அவர் குறித்து பாராதிராஜா தெரிவித்த இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது