
பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், பழைய பஸ் பாஸை பிப்ரவரி 15 ஆம் தேதி வரை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாநர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பேருந்து கட்டணம், கடந்த 2011 ஆம் ஆண்டு உயர்த்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 19 ஆம் சனிக்கிழமை அன்று முதல் அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது.
பேருந்து கட்டண உயர்வு, இரு மடங்காக உயர்த்தப்பட்டது. இதனை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்று எதிர்கட்சிகள் கூறி வருகின்றனர். பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள், அரசியல் கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று தமிழக அரசு அரசு பேருந்து கட்டணத்தை பைசா அளவில் குறைத்துள்ளது. அதாவது 5 ரூபாயில் இருந்து 4 ரூபாயாக குறைத்துள்ளது. இதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது வெறும் கண்துடைப்பு நாடகமே என்று எதிர்கசி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், நாளை திட்டமிட்டபடி மறியல் போராட்டம் நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.
பேருந்து கட்டண உயர்வால், பழைய பஸ் பாஸ் உள்ளவர்கள், பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். இந்த நிலையில், பழைய பஸ் பாஸ், பிப்ரவரி 15 ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.