டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் இளவரசி... விடுதலை எப்போது..?

By Thiraviaraj RMFirst Published Feb 2, 2021, 4:55 PM IST
Highlights

கொரோனா தொற்றுக்காக பெங்களூரு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளவரசி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
 

கொரோனா தொற்றுக்காக பெங்களூரு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளவரசி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் அடைக்கப்பட்டனர். தண்டனை காலம் முடிவடைந்ததை அடுத்து கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து கொரோனா தொற்று காரணமாக இளவரசியும் சிகிச்சை பெற்று வந்தாற். இந்நிலையில் இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

சசிகலாவோடு இணைந்து ஒரே நாளில் கைதான இளவரசி, சுதாகரனின் விடுதலை தாமதமாகியுள்ளது. இதற்கு காரணம், சசிகலா 90களில் கைதான போதும், அதற்கு பிறகு 2014ல் தீர்ப்பு வழங்கிய போதும், சிறையில் இருந்த 21 நாட்களும் தண்டனை காலத்தில் குறைக்கப்பட்டது. ஆனால் இந்த வழக்கில் இளவரசி, சுதாகரன் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற நாட்கள் வெவ்வேறாக உள்ளன. குறிப்பாக 1997ல் சசிகலா கைது செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இளவரசியும், சுதாகரனும் கைது செய்யப்பட்டதால் விடுதலை தேதி வேறுபடுகிறது. இதனால் இளவரசி பிப்ரவரி 5ஆம் தேதி விடுதலை ஆவார் என சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மறுபக்கம்  சுதாகரனோ அபராத தொகையை கட்டாத காரணத்தால் விடுதலை தள்ளி போவதாக கூறப்படுகிறது. இதனால் சுதாகரன் விடுதலை எப்போது என்பது இதுவரை அறியப்படவில்லை.

click me!