எல்லா காலநிலைகளிலும் தாக்கும் எஃப்15-x ரக விமானங்களை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்க அதிபர் ஒப்புதல். சீனா அலறல்.

By Ezhilarasan BabuFirst Published Feb 2, 2021, 3:46 PM IST
Highlights

அமெரிக்காவின் அதிநவீன போர் விமானங்களில் ஒன்றான எஃப் 15 - எக்ஸ் ரக விமானத்தை இந்தியாவுக்கு வழங்க ஜோ பிடன் ஒப்புதல் வழங்கி உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது 

அனைத்துக் கால நிலைகளிலும் தாக்கும் திறன்கொண்ட எஃப் 15 - எக்ஸ் ரக விமானங்களை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்கா அதிபர் ஜோ பிடன் ஒப்புதல் அளித்துள்ளார். இது இந்தியாவின் எதிரி நாடுகளான சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதிதாக அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பிடன் இந்தியாவுக்கு தனது நேசக் கரத்தை நீட்டியுள்ளார். ஏற்கனவே இந்தியா தனது எல்லையில் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளால் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வரும் நிலையில், தனது  ராணுவ பலத்தை பன்மடங்காக உயர்த்த திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை தடுப்பு ஆயுத அமைப்பை கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளது, அதேபோல் பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் அதிநவீன போர் விமானங்களில் ஒன்றான எஃப் 15 - எக்ஸ் ரக விமானத்தை இந்தியாவுக்கு வழங்க ஜோ பிடன் ஒப்புதல் வழங்கி உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இந்த விமானங்கள் அடுத்த வாரம் பெங்களூரில் தொடங்க உள்ள ஏரோ இந்தியா 2021 கண்காட்சியில் இடம்பெறும் என கூறப்படுகிறது.  போயிங் சர்வதேச விற்பனை மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு துணைத் தலைவர் மரியா எச். நானே இதை உறுதிப்படுத்தியுள்ளார். 

இது குறித்து தெரிவித்துள்ள அவர், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது, எஃப் 15 - எக்ஸ் பற்றிய தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளன, எஃப் 15 - எக்ஸ் விமானங்களை இந்தியாவிற்கு வழங்குவதற்கான எங்கள் கூட்டமைப்பு வைத்த கோரிக்கையை அமெரிக்கா ஏற்றுக் கொண்டுள்ளது என அவர் கூறியுள்ளார், பெங்களூரில் அடுத்த வாரம் தொடங்கும் ஏரோ இந்தியா கண்காட்சியில் 2021 எஃப் எக்ஸ் விமானம் இடம்பெறும் எனவும்,  இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புடிஆர்டிஓ தெரிவித்துள்ளது. 

அமெரிக்க குண்டு வீச்சு விமானம் பி1 பி லான்சர் உள்ளிட்ட விமானங்களும் அக் கண்காட்சியில் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த விமானம் காம்பாக்ட் விமானமாகும்,  இது f16-எக்ஸ் ரக விமானங்களின் மேம்படுத்தப்பட்ட தயாரிப்பாகும். இந்த பல்நோக்கு விமானம் அனைத்துக் கால நிலைகளிலும் தாக்கும் திறன் கொண்டது. பகல் மற்றும் இரவு நேரங்களிலும் எதிரிகளை குறிவைத்து தாக்கும் திறன்  கொண்டது என்பதால் அந்த விமானம் ரஃபேல் போர் விமானத்துக்கு அடுத்த நிலையில் இந்தியாவின் விமானப்படைக்கு வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

 

click me!