இளங்கோவன் வீட்டு ரெய்டு.. சிக்கிய 21 கிலோ தங்கம், 10 கார்கள், ரூ29 லட்சம்.. மலைக்க வைக்கும் பறிமுதல் பட்டியல்!

By Asianet TamilFirst Published Oct 22, 2021, 8:36 PM IST
Highlights

சேலத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர் இளங்கோவன் தொடர்புடைய இடங்களில் நடந்த ரெய்டில் 21.2 கிலோ தங்கம், 10 கார்கள் உள்பட பல பொருட்களும் ரூ.29 லட்சம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வலது கரமாக செயல்படுபவர் என அறியப்படுபவர் தமிழ்நாடு கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன். இவருக்கு சொந்தமான 27 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை இன்று அதிரடியாக சோதனை நடத்தினர். இவர் மீதான எப்.ஐ.ஆரில், ‘இளங்கோவன் 2014 - 2020 காலத்தில் பதவியில் இருந்தபோது அதிகாரத்தை பயன்படுத்தி தன்னுடைய பெயரிலும் மகன் பெயரிலும் சொத்துக்களை குவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 
2014-இல் இளங்கோவனின் சொத்து மதிப்பு ரூ.30 லட்சமாக இருந்த நிலையில், 2020-ஆம் ஆண்டில் ரூ. 5.6 கோடியாக அதிகரித்தது என்றும் இது வருமானத்துக்கு அதிகமாக 131 சதவீதம் அதிகம் என்றும் லஞ்ச ஒழிப்புத் துறை எப்ஐஆரில் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் இன்று நடந்த லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனையில், 21.2 கிலோ தங்கம், 282 கிலோ வெள்ளி, ரூ.29.77 லட்சம் பணம், 10 சொகுசு கார்கள், 2 சொகுசு பேருந்துகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

click me!