
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்த ஐ.ஜி. மற்றும் பெண் எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலில் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்….
கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்கியிருந்த போது அந்த விடுதிக்குள் அதிரடியாக நுழைந்த சோதனை நடத்தியவர்கள் வடக்கு மண்டல ஐஜி, செந்தாமரைக்கண்ணன் மற்றும் காஞ்சிபுரம் எஸ்.பி முத்தரசி….
தம்மை கடத்தி வந்த்தாக மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன் அளித்த புகாரின் பேரில் அப்போது அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக பொதுச்செயலாளர் சசிலகா உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே கூவத்தூர் பிரச்சனையை கையாண்ட வடக்கு மண்டல ஐ.ஜி. மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. முத்தரசி ஆகியோரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளிடயிட்டுள்ளது.
எதிர்பார்த்த ஒன்று தானே..!!