வாரத்திற்கு 1 மணி நேரமாவது வேகமாக நடந்தால் ஹார்ட் அட்டாக் வராது.!! ஆய்வு முடிவில் ஆச்சர்யம்.

By Ezhilarasan BabuFirst Published Jan 29, 2022, 6:56 PM IST
Highlights

நடை வேகத்தை மேம்படுத்துவதன் மூலம், இதய ஆரோக்கியத்தை நல்ல முறையில் பராமரிக்க முடியும் என்பது ஆய்வு முடிவுகளிலிருந்து தெளிவாகிறது.ஒரு வார உடற்பயிற்சிக்கு சமமான பலனை விறுவிறுப்பான நடைப்பயிற்சி தருகிறது.வாரத்திற்கு  ஒரு மணிநேரம் விறுவிறுப்பான நடைப்பயிற்சி ஆபத்தை குறைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். 

வேகமாக நடக்கும் பெண்களுக்கு இதய செயலிழப்பு ஏற்படும் அபாயம் 34% குறைவு என்றும் மணிக்கு 4.8 கிமீ வேகத்தில் இருந்தால் அது இன்னும் நல்லது என்றும்ஆராய்ச்சியாளர்கள்தெரிவித்துள்ளனர்.வாரத்தில் ஒரு மணிநேரம் வேகமாக நடப்பது ஆபத்தை குறைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நடைப்பயிற்சி ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் அதிக வேகத்தில் நடப்பது இதய ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது என்பது ஒரு சிலருக்கே தெரியும். அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆராய்ச்சி இதை உறுதி படுத்தியுள்ளது. மெதுவாக நடப்பவர்களை விட வேகமாக நடக்கும் பெண்களுக்கு இதய செயலிழப்பு அபாயம் 34% குறைவு என்று அது கூறுகிறது.

ஆய்வின் போது, ​​ஆராய்ச்சியாளர்கள் 50 முதல் 79 வயதுடைய 25,183 பெண்களின் உடல் நிலை பதிவுகளை ஆய்வு செய்தனர். அவற்றில் பெண்களின் நடை வேகம் பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பங்கேற்பாளர்கள் சுமார் 17 ஆண்டுகளாக கண்காணிக்கப்பட்டனர். அதில் 1,455 பெண்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டது அவர்கள் பெரும்பாலும் மெதுவாக நடப்பவர்களாக இருந்துள்ளனர். ஆனால் நடை வேகம் மணிக்கு 4.8 கிமீக்கு அதிகமாக இருப்பதாக கூறும் பெண்களின் ஆபத்து 34% குறைவாக உள்ளது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

அதே நேரத்தில் சராசரியாக மணிக்கு 3.2 கிமீ  வேகத்தில் நடப்பவர்கள் 27% குறைவான ஆபத்தில் உள்ளனர். இதயப் பிரச்சனைகளின் அபாயமும் குறைகிறது, ஆய்வின் முதன்மை ஆசிரியர் டாக்டர். சார்லஸ் ஈட்டனின் கருத்துப்படி, நடை வேகமே இதய ஆரோக்கியத்தின் அளவுகோலாகும். வேகமாக நடக்க முடியாவிட்டால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஆபத்தில் உள்ள பெண்களில், அவர்களின் இதயத்திலிருந்து உடலுக்கு போதுமான இரத்தத்தை பெறுவது தடைபட்டிருக்கிறது என்று அர்த்தம். இது வயதானவர்களுக்கு ஏற்படும் பிரச்சனையாகும், ஆனால் இது சிறந்த வாழ்க்கை முறை மூலம் மேம்படுத்தப்படுத்தலாம்.

வேகமாக நடப்பதால், உடலில் இரத்த ஓட்டம் சீரானதாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இதயம் சிறப்பாக செயல்படுகிறது என்றால் இதயம் தொடர்பான பிற பிரச்சனைகளின் அபாயத்தையும் குறைக்க முடியும், அமெரிக்கன் ஜெரியாட்ரிக்ஸ் சொசைட்டி ஜர்னலில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வின்படி , 27 ஆயிரம் பெண்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வில் மெதுவாக நடப்பதால், இதய தசையில் ஒருவித பாதிப்பு ஏற்படலாம், மெதுவாக நடப்பவர்களை விட வேகமாக நடப்பவர்கள் அதிக பலன்களைப் பெறுகிறார்கள் என்பதை ஆய்வின் முடிவுகள் காட்டுவதாக கூறப்பட்டுள்ளது. ஒரளவுக்கு வேகமாக நடப்பவர்களுக்கு இதயம் தொடர்பான ஆபத்து 20% குறைவாக உள்ளது என்றும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. 

நடை வேகத்தை மேம்படுத்துவதன் மூலம், இதய ஆரோக்கியத்தை நல்ல முறையில் பராமரிக்க முடியும் என்பது ஆய்வு முடிவுகளிலிருந்து தெளிவாகிறது. ஒரு வார உடற்பயிற்சிக்கு சமமான பலனை விறுவிறுப்பான நடைப்பயிற்சி தருகிறது. வாரத்திற்கு ஒரு மணிநேரம் விறுவிறுப்பான நடைப்பயிற்சி ஆபத்தை குறைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இது வாரத்திற்கு இரண்டு மணிநேரம் மிதமான அல்லது மெதுவான வேகத்தில் நடப்பதற்குச் சமம். அதாவது வேகமாக நடக்க முடியாத பெண்களுக்கு சராசரி வேகத்தில் நடப்பதும் பலன் அளிக்கும். இது மட்டுமின்றி, வாரத்திற்கு 150 நிமிடம் உடற்பயிற்சி செய்வது போல், சிறிது நேரம் வேகமாக நடப்பது பலன் தரும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. 

click me!