ஹெல்த் டிரிங்க்ஸ் குடிப்பதால்.. மாரடைப்பு இரத்தும் உறைதல்.. மருத்துவர்கள் எச்சரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Jan 29, 2022, 6:47 PM IST
Highlights

நூற்றுக்கும் மேற்பட்ட சப்ளிமெண்ட்கள் உள்ளன:-  இதுகுறித்து ESCயின் இருதய நோய் நிபுணர் கூறுகையில் நிபுணர்களின் ஆலோசனையின்றி எடை இழப்பு முதல் தசைகளை வளர்ப்பது வரை அனைத்திற்கும் மில்லியன் கணக்கான மக்கள் சப்ளிமெண்ட்சை பெருமளவில் பயன்படுத்துகின்றனர். ஜிம் செல்பவர்கள் மத்தியிலும் இது அதிக பயன்பாட்டில் இருந்து வருகிறது.

உடல் ஆரோக்கியத்திற்காக உடற்பயிற்சியின் போது குடிக்கும் ஆரோக்கிய பானங்கள் ஹெல்த் ட்ரிங்க்ஸ்  சப்ளிமெண்ட்ஸ்சுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளும் போது ரத்தம் உறைதல், மாரடைப்பு மற்றும் கல்லீரல் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையின் ஆய்வின் படி, தொடர்ச்சியான ஸ்டீராய்டு பயன்பாடு ரத்த அழுத்தத்துடன் சிறுநீரகம் மற்றும் இதய ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் கூறிகிறது.

உணவே மருந்து மருந்தே உணவு என்ற காலம் போய்,  உணவே விஷமாகும் சூழல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உடல் நலத்திற்காக பருகும் ஆரோக்கிய பானங்கள் உயிரைப் குடிக்கும் ஆபத்தாக மாற வாய்ப்புள்ளது என்றும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. சுறுசுறுப்புக்காக அல்லது செயல் திறனை அதிகப்படுத்த நாம் விளையாட்டு சப்ளிமெண்ட்ஸ் அல்லது ஹெல்த் டிரிங்க்ஸ் எடுத்துக்கொண்டால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவை இதயத்தை ஆபத்தில் ஆழ்த்தலாம் என்றும் ஐரோப்பிய இருதயநோய் கழகம் எச்சரித்துள்ளது. தங்களது செயல் திறனை மேம்படுத்த அதிக எண்ணிக்கையிலான விளையாட்டு வீரர்கள் மற்றும் இளைஞர்கள் இத்தகைய பானங்களை எடுத்துக் கொள்கிறார்கள், விளையாட்டு வீரர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் பானங்களாகவும்  பயன்படுகிறது. இதுபோன்ற பானங்களால் கடந்த 2006ஆம் ஆண்டு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த ஊட்டச்சத்து தாயாரிப்புகள் (products) கடுமையான மருந்து பாதுகாப்பு தடைகளுக்கு உட்பட்டவை அல்ல என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இவைகளுக்கு எந்தவிதமான கண்காணிப்பும், கண்டிப்பும் இல்லாததால் இந்த சப்ளிமெண்ட்ஸ் ஊக்கமருந்து விதிகளை மீறும் வகையில் அதிக ரசாயனங்கள் கொண்ட கலவையாக இருந்து வருகின்றன. இந்த சப்ளிமெண்ட்ஸ்களை ஒன்றுடன் ஒன்றை கலப்பதன் மூலம் அதிக ஆபத்தை சந்திக்க கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சில நேரங்களில் அவை மரணத்தையும் ஏற்படுத்தலாம் என்றும் எச்சரிக்கின்றனர்.

ஸ்டெராய்டுகள் இதயத்தை தாக்குகிறது:-  அனைத்து வகையான ஊக்க மருந்து பொருட்களும் தீங்கு விளைவிக்கும் என்று ஆய்வின் ஆசிரியரும் உலக தடகளத்தில் ஆரோக்கியம் மற்றும் அறிவியல் மேலாளருமான டாக்டர் பாலோ அடாமி எச்சரித்துள்ளார். அனாபோலிக் ஸ்டெராய்டுகளைப் போலவே செயற்கை ஹார்மோன்களும் உடலில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. தொடர்ந்து அவைகளை எடுத்துக் கொள்வதன் மூலம், கல்லீரல் பாதிப்புடன் உடலில் கட்டிகள் உருவாகலாம், சிலநேரங்களில் இதயத்தின் அளவு பெரிதாக மாறலாம், உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தலாம், இது ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவிலும் மாற்றத்தை ஏற்படுத்தலாம், சில நேரங்களில் ரத்தம் உறைதலை அது ஏற்படுத்தக்கூடும். இளைஞர்களுக்கு அதிக அளவில் மாரடைப்பு அபாயத்தை இது உருவாக்குகிறது. ஆண்ட்ரோஜன் புற்றுநோய் மற்றும் இருதய பிரச்சினைகளில் அபாயத்தை அதிகரிக்கின்றன. 

ஊக்க மருந்துகள் அசாதாரண இதய பாதிப்பை உண்டுபண்ணுகிறது:- கடுமையான மன அழுத்தம் மற்றும் கரோனரி தமனி நோய் பாதிப்பை அதிகரிக்கின்றன. அம்பெடமைன் மற்றும் மீதில்பெனிடேட்  போன்ற தூண்டுதல்கள் இதயம் மற்றும் மூளையில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இவை இதய செயலிழப்பு இதய அறை பிரச்சினைகள் மற்றும் ரத்தக் கசிவை ஏற்படுத்துகின்றன. அனாபோலிக் ஸ்டெராய்டுகளை பயன்படுத்தும் வீரர்கள் பயன்படுத்தாதவர்களை விட 20 மடங்கு அதிகமாக இறப்பார்கள். இந்த இறப்புகள் மூன்றில் ஒரு பங்கு இதய பிரச்சினைகளால் ஏற்படுகிறது.  ESC-யின்படி பெரும்பாலான விளையாட்டு வீரர்கள் பயிற்சியாளர்கள் சக விளையாட்டு வீரர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் அதிக அளவில் பிரச்சனைக்கு ஆட்படுகின்றனர். 

நூற்றுக்கும் மேற்பட்ட சப்ளிமெண்ட்கள் உள்ளன:-  இதுகுறித்து ESCயின் இருதய நோய் நிபுணர் கூறுகையில் நிபுணர்களின் ஆலோசனையின்றி எடை இழப்பு முதல் தசைகளை வளர்ப்பது வரை அனைத்திற்கும் மில்லியன் கணக்கான மக்கள் சப்ளிமெண்ட்சை பெருமளவில் பயன்படுத்துகின்றனர். ஜிம் செல்பவர்கள் மத்தியிலும் இது அதிக பயன்பாட்டில் இருந்து வருகிறது. நூற்றுக்கும் அதிகமான ஆற்றலை அதிகரிக்கும் ஆரோக்கிய சப்ளிமெண்ட்ஸ்களின் புத்துணர்ச்சியை தூண்டும் ஸ்டெராய்டுகள் மற்றும் ஹார்மோன்கள் கண்டறியப்பட்டுள்ளன. யுனைட்டட் கிங்டம் மருந்து கட்டுப்பாட்டாளர்களின் ஆராய்ச்சியில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையின் படி தொடர்ச்சியாக ஸ்டீராய்டு பயன்பாடு உயர் இரத்த அழுத்தத்துடன், சிறுநீரகம், இதயம் மற்றும் கல்லீரல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கிறது. எனவே ஜிம் மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்வோர் இதுபோன்ற ஆரோக்கியமற்ற புத்துணர்ச்சி பானங்களை பயன்படுத்துவதில்  கவனத்துடன் இருக்கவேண்டும் என எச்சரிக்கப்படுகிறது. 

 

click me!