சாதி-மதம் பார்த்தால் கட்சியில் இருந்து நீக்கப்படுவீர்கள்... ரஜினி மக்கள் மன்றம் எச்சரிக்கை..!

Published : Dec 19, 2020, 12:00 PM IST
சாதி-மதம் பார்த்தால் கட்சியில் இருந்து நீக்கப்படுவீர்கள்... ரஜினி மக்கள் மன்றம் எச்சரிக்கை..!

சுருக்கம்

சாதி, மதம் பார்க்காமல் அனைவரையும் பூத் கமிட்டியில் நியமிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

பூத் கமிட்டிக்கு நிர்வாகிகளை நியமிக்கும்போது பணம் பெற்றால் கட்சியில் இருந்து நீக்கப்படுவீர்கள் என மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம்  எச்சரிக்கை விடுத்துள்ளது.


 
வரும் டிசம்பர் 31 ஆம் தேதி கட்சியை அறிவிக்க இருக்கிறார் ரஜினிகாந்த். அதற்காக ஆலோசனைகளை நடத்தி வருகிறார். வரும் சட்டமன்றத் தேர்தலையொட்டி ரஜினியின் அரசியல் பணிகள் தீவிரமாகியுள்ளன. இந்நிலையில், ’பூத் கமிட்டி போன்றவற்றிற்கு நிர்வாகிகளை நியமிக்கும்போது பணம் பெற்றால் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள்’என்று மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினியின் மக்கள் மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சாதி, மதம் பார்க்காமல் அனைவரையும் பூத் கமிட்டியில் நியமிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

மன்ற நிர்வாகிகள் டிசம்பர் 25 க்குள் பூத் கமிட்டி உறுப்பினர் பட்டியலை தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டுமென்றும் உத்தரவு போடப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!