அமைச்சர் பதவி என்பது முள் படுக்கையில் அமர்வது போன்றது... செல்லூர் ராஜூவின் சரவெடி பேச்சு..!

Published : Dec 19, 2020, 11:39 AM IST
அமைச்சர் பதவி என்பது முள் படுக்கையில் அமர்வது போன்றது... செல்லூர் ராஜூவின் சரவெடி பேச்சு..!

சுருக்கம்

கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நான் பார்ப்பதில்லை. எந்த அமைச்சர்களும் முதல்வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்ப்பதில்லை. எங்களுக்கு அதற்கான நேரமும் இல்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நான் பார்ப்பதில்லை. எந்த அமைச்சர்களும் முதல்வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்ப்பதில்லை. எங்களுக்கு அதற்கான நேரமும் இல்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

மதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களுக்கு பேட்டிளிக்கையில்;- திமுக ஆட்சிக் காலத்தில் பெட்ரோல் விலை உயர்வானபோது மு.க.ஸ்டாலின் எங்கே இருந்தார். திமுக மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வர நினைக்கிறது. அதிமுகவை அடிமை அரசு எனக்கூற மு.க. ஸ்டாலினுக்கு எந்தத் தகுதியும் இல்லை. அவர்கள்தான் காங்கிரஸ் ஆட்சியில் அடிமையாக இருந்தனர். காங்கிரஸ் மத்தியில் அங்கம் வகித்த போது கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் கைது செய்யபட்டனர்.

மேலும், பேசிய அமைச்சர் புதிதாக கட்சி தொடங்கியுள்ள கமல்ஹாசனுக்கு நிதிநிலை, நிர்வாகம், சட்ட நுணுக்கங்கள் எப்படி என்பது தெரியாது. அமைச்சர் பதவி என்பது முள் படுக்கையில் அமர்வது போன்றது. அமைச்சர்கள் மலர் படுக்கையில் அமரவில்லை. கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நான் பார்ப்பதில்லை. எந்த அமைச்சர்களும் முதல்வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்ப்பதில்லை. எங்களுக்கு அதற்கான நேரமும் இல்லை. 

கமல் எதைச் சொல்லியும் அதிமுக தொண்டர்களைப் பிரிக்க முடியாது. கூட்டணியை நம்பி அதிமுக இல்லை. மக்களை நம்பியே உள்ளது. அதிமுகவிற்கு கூட்டணி என்பது பெரிதல்ல மக்கள்தான் எஜமானார்கள். மக்கள் எங்களை நம்புகிறார்கள் மக்களை நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

CM Vijay: டைவர்ஸ் கேஸை வாபஸ் வாங்கிய சங்கீதா! சமரசமா? அரசியல் நிர்பந்தமா?
Vijay - Sangeetha: பிரியமானவருக்காக இறங்கி வந்த சங்கீதா விஜய்.! தடைகளை உடைத்து குடும்பத்தை ஒன்று சேர்த்தது யார் தெரியுமா?!