கேரளா உள்ளாட்சி தேர்தல்... ஒரு ஓட்டு கூட பெறாத கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்..!

By Thiraviaraj RMFirst Published Dec 19, 2020, 11:30 AM IST
Highlights

கேரளாவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஒருவர் ஒரு ஓட்டு கூட பெறாதது அந்த கட்சியினர் இடையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

கேரளாவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஒருவர் ஒரு ஓட்டு கூட பெறாதது அந்த கட்சியினர் இடையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கோழிக்கோடு மாவட்டம், கொடுவள்ளியை சேர்ந்த காரன் பைசல். கேரளாவை உலுக்கிய தங்க கடத்தல் வழக்கில் அவர் சிக்கியதால் உள்ளாட்சித் தேர்தலில் அவர் போட்டியிடுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சீட் தர மறுத்து விட்டது.

அதற்கு பதிலாக வேறு ஒருவரை வேட்பாளராக நிறுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த காரன் பைசல் கொடுவெல்லியில் உள்ள 15ஆம் வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்டார். முடிவில் பைசல் வெற்றிபெற, மார்க்சிஸ்ட் வேட்பாளர் தோல்வி அடைந்தார். இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை என்பதுதான். இத்தனைக்கும் வேட்பாளர் வீட்டில் 5 ஓட்டுகள் இருக்கின்றன.

இது தவிர அது வேட்பாளர் ஓட்டும் மாற்றுக் கட்சிக்கு பதிவானது தலைமையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதைத் தொடர்ந்து தோல்வி குறித்து தனது வேட்பாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

click me!