நினைத்தால் நாளைக்கே பொது குழுவை கூட்டுவோம்.. உங்களால் முடியுமா.. ஒபிஎஸ்க்கு சவால் விடும் ராஜ் சத்யன்.

Published : Aug 17, 2022, 04:07 PM ISTUpdated : Aug 17, 2022, 04:14 PM IST
நினைத்தால் நாளைக்கே பொது குழுவை கூட்டுவோம்.. உங்களால் முடியுமா.. ஒபிஎஸ்க்கு சவால் விடும் ராஜ் சத்யன்.

சுருக்கம்

தேவைப்பட்டால் அடுத்த 15 நாட்களில் பொதுக்குழுவை கூட்ட  எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களாகிய தங்களால் முடியும், உங்களால் முடியுமா என ஓ.பன்னீர் செல்வத்திற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ் சத்யன் கேள்வி எழுப்பியுள்ளார். 

தேவைப்பட்டால் அடுத்த 15 நாட்களில் பொதுக்குழுவை கூட்ட  எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களாகிய தங்களால் முடியும், உங்களால் முடியுமா என ஓ.பன்னீர் செல்வத்திற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ் சத்யன் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த ஜூலை 11-ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக ஓபிஎஸ்- இபிஎஸ் தலைமையின் கீழ் இயங்கி வந்தது. ஆனால் ஓற்றைத் தலைமை வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் கோரிக்கை எழுப்பி வந்த நிலையில், ஓபிஎஸ் தரப்பிலிருந்து அதற்கு எதிர்ப்பு வலுத்தது. ஆனால் கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக் குழுவில் எடப்பாடி பழனிச்சாமி ஒருமனதாக அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அதுமட்டுமின்றி கட்சியின் விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டு ஓபிஎஸ் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

இதையும் படியுங்கள்:  அதிமுக பொதுக்குழு தொடர்பாக நீதிபதி தவறான தீர்ப்பை கொடுக்கவில்லை...! இபிஎஸ் ஆதரவாளர் கே பி முனுசாமி விளக்கம்

அதைத்தொடர்ந்து இபிஎஸ் ஓபிஎஸ் மாறிமாறி ஆதரவாளர்களை நீக்கி வந்தனர். பன்னீர்செல்வம் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவை எதிர்த்து வழக்கு தொடுத்தனர். உச்சநீதிமன்றம் சென்றனர், சென்னை உயர் மன்றத்தையே அனுகலாம் என நீதிமன்றம் அறிவுறுத்தியது. அத்துடன் தங்கள் வாழ்க்கை விசாரிக்கும் நிதிபதியை மாற்ற வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி மாற்றப்பட்டார் ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம், கட்சியின் விதிமுறைகளுக்கு எதிரானது என ஓபிஎஸ் தரப்பில் வாதிட்ட பட்டு வந்தது. இந்நிலையில் அந்த வழக்கு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

இதையும் படியுங்கள்: Dr.சரவணன் இடத்திற்கு கடும் போட்டி.. வந்தவர்களுக்க பதவி கொடுத்தால் இதுதான் கதி.. கதறும் அடிமட்ட தொண்டர்கள்.

அதில் ஜூலை 14ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லாது எனவே ஜூலை 23ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடரும் என்றும், ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் இணைந்து தான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது ஓ. பன்னீர்செல்வம் தரப்புக்கு கிடைத்த மிகப் பெரிய  வெற்றியாக கருதப் படுகிறது. இது அவரது தரப்புக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் புதிய பொதுக்குழுவை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் எடப்பாடி பழனிச்சாமியின் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற பதிவி செல்லாததாக மாறியுள்ளது.

இந்த தீர்ப்பை வரவேற்று ஓபிஎஸ் சார்பில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர் ஜெயக்குமார். இது இறுதி தீர்ப்பு அல்ல, தீர்ப்பின் நகல் வந்தவுடன் சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். இது குறித்து ஓபிஎஸ் தரப்பனர் கூறுகையில் இது ஓபிஎஸ் தரப்பிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி, நாங்கள் முன்வைத்த வாதத்தை ஏற்று நீதிமன்றம் இத்தீர்ப்பு வழங்கியுள்ளது என கூறியுள்ளனர்.

 

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர் ராஜன் செல்லப்பாவின் மகனும், அதிமுகவின் மதுரை மண்டல ஐடி விங் செயலாளர் ராஜ் சத்யன், மொத்தமுள்ள 2663 பொதுக்குழு உறுப்பினர்களின் 2532 உறுப்பினர்களால் அண்ணன் எடப்பாடி யாரின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஒன்னரை கோடி தொண்டர்களுக்கு கான ஒருமித்த குரலாய் ஒளித்து வருகிறார், தேவைப்பட்டால் 15 நாட்களில் அல்ல நாளையே பொதுக்குழுவை கூட்ட எங்களால் முடியும், உங்களால் முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.  
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பாமக பிரச்சனைக்கு திமுக தான் காரணம்.. ராமதாஸை சுற்றி தீய சக்திகள்.. ஒரே போடாக போட்ட அன்புமணி!
ஒரு தலைவருக்கு இது கூடவா தெரியாது.. விஜய்யை கழுவி ஊற்றிய புதுச்சேரி அமைச்சர்.. என்ன விஷயம்?