"நாம் ஒற்றுமையாக இருந்தால் யாரும் அதிமுகவை அழிக்க முடியாது" - தம்பிதுரை

Asianet News Tamil  
Published : Apr 19, 2017, 10:55 AM ISTUpdated : Sep 19, 2018, 03:10 AM IST
"நாம் ஒற்றுமையாக இருந்தால் யாரும் அதிமுகவை அழிக்க முடியாது" - தம்பிதுரை

சுருக்கம்

if we unite nobody can divide us says thambidurai

அதிமுகவை அழிக்க மத்திய அரசும், பாஜகவும் செயல்படுவதாக பரவலாக பேசப்படுகிறது. இதுபற்றி அதிமுகவினர் சிலரும் விமர்சித்து வருகின்றனர். 

இதுகுறித்து அதிமுக மூத்த நிர்வாகியும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை செய்தியாளர்களிடம் கூறியதாவது.

அதிமுகவை அழிக்க பாஜக செயல்படுவதாக பேசுவது குழப்பமானது. நாம் ஒற்றுமையாக இருந்தால், மற்றவர்கள் யாரும் அதிமுகவை அழிக்க முடியாது.

மத்திய அரசும், பாஜகவும் தமிழகத்தில் கால் ஊன்றுவதற்காக அதிமுகவை அழிக்க நினைப்பதாக பலரும் கூறுகின்றனர். அவர்களது செயல்பாடுகளுக்கு நாங்கள் இடம் கொடுக்கவில்லை. நாங்கள் ஒற்றுமையாகவே இருக்கிறோம்.

எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், அதிமுகவை அழிக்க விடமாட்டோம். அதிமுக ஏமாந்த இயக்கம் அல்ல. அதை அழிக்கவோ, மாற்றவோ யாராலும் முடியாது.

தமிழகத்தில் நடப்பது ஜெயலலிதாவின் ஆட்சி. அதை நல்லபடியாக நடத்தி வருகிறோம். இதை யாரும் தடுக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

இப்படியே போனால் காங்கிரஸ் அழிந்து விடும்.. தலைமை வேஸ்ட்.. ஆதங்கத்தை கொட்டித்தீர்த்த ஜோதிமணி!
ஓ.பி.எஸ்- டிடிவி.தினகரனுக்கு அமித் ஷா போடும் முட்டுக்கட்டை..! தவெகவுக்கு செக் வைக்கும் அமமுக..!