சனாதனத்தை ஒழித்தால் தீண்டாமை ஒழிந்துவிடும் என்று தாம் நம்புவதாக தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வருவது போல் தெரியவில்லை. புள்ளிவிவரம் எடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். 10 வருடமாக அந்தக் கோரிக்கையை தான் நாங்கள் வைத்து வருகிறோம். அதை எப்போது செய்யப் போகிறார்கள் என்று தெளிவு இல்லை.
undefined
தமிழகத்தில் தீண்டாமை அதிகமாக இருப்பதாக ஆளுநர் கூறுகிறார். இதற்குத்தான் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறோம். சாதிய வேறுபாடுகள் இருக்கக் கூடாது. சனாதனத்தை ஒழித்தால் தீண்டாமை ஒழிந்துவிடும் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்தார்.
ரேடார் இணைப்பு துண்டிப்பு; அரி கொம்பன் யானையை வலை வீசி தேடும் வனத்துறை அதிகாரிகள்
இதனைத் தொடர்ந்து மதுரையில் திமுக மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கும் விழாவில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது வரும் எனும் ரகசியத்தை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறவேண்டும். நீட் தேர்வு காரணமாக, பல மாணவர்களின் உயிர்களை இழந்துள்ளோம்.
திமுகவின் கையெழுத்து இயக்கத்தில் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். மேலும் அவர் பேசுகையில், அதிமுக, பாஜக கூட்டணி உட்கட்சி பிரச்சினை அது குறித்து கருத்து கூற விரும்பவில்லை. பாஜகவினர் அண்ணா குறித்து பேசியதற்கு திமுக தான் முதல் கண்டனத்தை பதிவு செய்தது என்றார்.