தன்மானம் இருந்தா அறிவாலய வாசலில் வந்து நிற்கக் கூடாது...! விஜயகாந்த் கட்சி சவாலுக்கு சம்மதமா?: பிரேமலதாவை சீண்டும் தி.மு.க.

By Vishnu PriyaFirst Published Sep 19, 2019, 6:21 PM IST
Highlights

ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிப்பது பாஸிடீவ் பாலிடிக்ஸ். ஆனால் ஒரே மேடையில் இரண்டு ஜாம்பவான்களை எதிரியாக்கிக் கொள்வது பாழாய்ப் போகும் பாலிடிக்ஸ். இதைத்தான் தே.மு.தி.க. செய்துவிட்டு, இப்போது திருதிருவென முழித்துக் கொண்டு நிற்கிறது! என்று செமத்தியாய் தாக்குகின்றனர் அரசியல் விமர்சகர்கள். 
விவகாரம் இதுதான்!

ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிப்பது பாஸிடீவ் பாலிடிக்ஸ். ஆனால் ஒரே மேடையில் இரண்டு ஜாம்பவான்களை எதிரியாக்கிக் கொள்வது பாழாய்ப் போகும் பாலிடிக்ஸ். இதைத்தான் தே.மு.தி.க. செய்துவிட்டு, இப்போது திருதிருவென முழித்துக் கொண்டு நிற்கிறது! என்று செமத்தியாய் தாக்குகின்றனர் அரசியல் விமர்சகர்கள். 
விவகாரம் இதுதான்!

சமீபத்தில் திருப்பூரில் நடந்த தங்கள் கட்சியின் விழாவில் தங்கள் கூட்டணியிலிருக்கும் ஆளும் அ.தி.மு.க., மற்றும் தமிழக எதிர்க்கட்சியான தி.மு.க. இரண்டையுமே சரமாரியாக விமர்சித்துவிட்டது அக்கட்சி. நூறு ஜெயலலிதாவுக்கு ஒரு பிரேமலதா சமம்! என்றும், எம்.ஜி.ஆரை விட கருப்பு எம்.ஜி.ஆர். ஆன விஜயகாந்த் உயர்ந்தவர்! என்றும் பேசி அ.தி.மு.க. உடனான கூட்டணிக்கு குந்தகம் செய்தனர் தே.மு.தி.க. நிர்வாகிகள். 

அடுத்துப் பேசிய பிரேமலதாவோ “நன்றாக கவனியுங்கள், நமது தே.மு.தி.க. துவங்கப்பட்ட பிறகு தி.மு.க.வால் ஆட்சிப் பொறுப்புக்கு வர முடியவில்லை. இனியும் அவர்களால் வர முடியாது, வரவும் விடமாட்டோம்.” என்று போட்டுத் தாக்கினார். ஆக ஒரே மேடையில் கூட்டணி நண்பன், நீண்ட நாள் எதிரி என இரண்டு கழகங்களையும் விமர்சித்துப் பேசி, தே.மு.தி.க. தன்னைத் தனிமைப் படுத்திக் கொண்டுவிட்டது! என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். 

இந்த நிலையில் பிரேமலதாவின் இந்த பேச்சுக்கு கடுமையாக ரியாக்ட் செய்ய துவங்கியுள்ள தி.மு.க.வினரோ ”அதிக துடுக்காக பேசியிருக்கிறார் பிரேமலதா. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் எங்களோடு கூட்டணி வைப்பதற்கு ஆளாய்ப் பறந்தது அக்கட்சி. தொகுதி பங்கீட்டை  முடித்து, கூட்டணி கதவுகள் மூடப்பட்டு விட்ட நிலையிலும் துரைமுருகனுக்கு தூது அனுப்பினார் சுதீஷ். இவர்கள் அரசியலுக்கு வந்த பின் எங்கள் கட்சிக்கு எழுச்சி இல்லை! என்றால் ஏன் எங்களிடம் கூட்டணிக்கு தொங்கியிருக்க வேண்டும்? 

இப்போது சொல்கிறோம், தேய்ந்து அமாவாசையாகிவிட்ட தே.மு.தி.க.வை இனி நாங்கள் சீண்டப்போவதில்லை. ஆனால் படுதோல்வி அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகி, ஒன்றிரண்டு எம்.எல்.ஏ.க்களையாவது பெற்றுவிடும் நோக்கில் தே.மு.தி.க. எதிர்வரும் சட்டமன்ற தேர்தலின் போது எங்கள் அறிவாலயத்தின் வாசற்படிக்கட்டுக்களை மிதிக்க கூடாது. 

விஜயகாந்த் கட்சிக்கு தன்மானம் என்று ஒன்று இருந்தால் இதை செய்யவே கூடாது, இந்த சவாலை ஏற்க தயாரா?” என்று கேட்டுள்ளனர். 
போட்டி பெருசாதான் இருக்குது!

click me!