அப்படி நடக்கலனு நிரூபித்தால் அமைச்சர் செங்கோட்டையனுக்கு ரூ.1 கோடி தருகிறோம் - செ.நல்லசாமி சவால்...

Asianet News Tamil  
Published : Nov 17, 2017, 08:55 AM ISTUpdated : Sep 19, 2018, 01:27 AM IST
அப்படி நடக்கலனு நிரூபித்தால் அமைச்சர் செங்கோட்டையனுக்கு ரூ.1 கோடி தருகிறோம் - செ.நல்லசாமி சவால்...

சுருக்கம்

If this proves to happen the minister will give Rs 1 crore to Chengottayeni - Nallasamy challenge ...

கரூர்

அரசாணைக்கு புறம்பாக  கீழ்பவானி அணையில் நீர் நிர்வாகம் கடைப்பிடிக்கப்படவில்லை என்று நிரூபித்தால் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனுக்கு ரூ. 1 கோடியை கீழ்பவானி விவசாயிகள் சங்கம் கொடுக்கும் என்று கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி அதிரடியாக தெரிவித்துள்ளார்.

கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி கரூரில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியது:  "கீழ்பவானி அணையில் காவிரி இறுதித் தீர்ப்புக்கும், அரசாணைக்கும் புறம்பாக நீர் நிர்வாகம் கடைப்பிடிக்கப்படவில்லை என்றும்,  இதுகுறித்து சிலர் வதந்தி பரப்பி வருகிறார்கள்' என்றும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

இதுமுற்றிலும் தவறானது. இதனை அவர் நிரூபித்தால் அவருக்கு ஒரு கோடி ரூபாயை கீழ்பவானி விவசாயிகள் சங்கம் தரும்.

ஆளுநர் பதவி என்பது தீயணைப்பு வாகனம் போன்றது.  தீ விபத்து ஏற்பட்டால் சம்பவ இடத்திற்குச் சென்று அணைக்கலாம்.  அதேபோன்று சட்டம் -ஒழுங்கு கெடும்போதுதான் ஆளுநருக்கு வேலை. அரசு நிர்வாகத்தில் அவர் தலையிடக்கூடாது.

கடந்த 1967 முதல் தமிழக அரசியலில் சினிமாத் துறையினரின் ஆதிக்கம் இருந்து வருகிறது. ஜெயலலிதா இறந்துவிட்டதாலும்,  கருணாநிதி உடல்நலக்குறைவால் ஓய்வு எடுத்து வருவதாலும், தற்போதைய அரசியல் சூழ்நிலையில் நடிகை நயன்தாரா அரசியலுக்கு நுழைந்தால் அவர்களின் வெற்றிடத்தை நிரப்ப இயலும் என கேரள பத்திரிகை ஒன்று எழுதியுள்ளது.  அந்த அளவுக்கு தமிழகத்தின் நிலை தாழ்ந்துவிட்டது.

தமிழகத்தை பொருத்தவரை தகுதி இருந்தால் மட்டுமே நடிகர்கள் அரசியலுக்கு வரவேண்டும். ரஜினி, கமல் அரசியலுக்கு வருவதில் தவறில்லை" என்று அவர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

திமுகவுக்கு டாடா.. விஜய்யுடன் 'கை' கோர்க்கும் காங்கிரஸ்.. தவெகவுடன் முடிந்த ரகசிய டீல்?
சொந்த வீடும் இல்லை; காரும் இல்லை.. வெறும் ரூ.2,000-ல் வாழ்க்கை நடத்திய ஐயா நல்லகண்ணு.. அரசியலில் ஓர் அதிசயம்!