இந்தியர்கள் என்று சென்னால் உக்ரைன் எல்லையில் தாக்குகிறார்கள்.. நாடு திரும்பிய மாணவர்கள் பகீர்.

Published : Mar 02, 2022, 10:22 AM IST
இந்தியர்கள் என்று சென்னால் உக்ரைன் எல்லையில் தாக்குகிறார்கள்.. நாடு திரும்பிய மாணவர்கள் பகீர்.

சுருக்கம்

எங்களுக்கு நம்பிக்கை அளித்தார்.  மேலும் இங்கு பத்திரமாக மீட்டு வந்த தமிழக அரசுக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர். எல்லை பகுதியில் இந்தியர்கள் என்றால் தாக்குகின்றனர். இதனால் தான் மிகவும் கஷ்டப்பட்டோம். என்றனர்.

இந்தியர்கள் என்று சொன்னாலே உக்ரைன் எல்லையில் தாக்கப்படுவதாக நாடு திரும்பிய மாணவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை திரும்பிய தமிழக மாணவர்கள் இந்த தகவலை தெரிவித்துள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உக்ரைனில் இருந்து 3 வது நாளாக 37 தமிழக மாணவர்கள் சென்னை வந்தனர் அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார். உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட  இந்திய மாணவர்களுடன் சிறப்பு விமானம் டெல்லி வந்தது. தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் 2 நாளாக 45 பேர் வந்துள்ளனர். 3வது நாளாக நேற்று தமிழ்நாட்டை சோ்ந்த 43 மருத்துவ மாணவ- மாணவிகள் வந்தனர். இதில் கன்னியாகுமரியை சேர்ந்த 3 பேர் திருவனந்தபுரத்திற்கும் 2 பேர் கோவைக்கும் ஒருவர் பெங்களூருக்கும் டெல்லியில் இருந்து விமானம் மூலமாக சென்னை வந்தனர். இதில் சென்னையில் 13, கோவை 4, மதுரை-3, தர்மபுரி-1 திருநெல்வேலி 1, தூத்துக்குடி-1, விழுப்புரம்-3, செங்கல்பட்டு-1, சேலம்-1, வேலூர்-3 உள்பட 37 பேரும் டெல்லியில் இருந்து விமானம் முலம் சென்னை விமான நிலையம் வந்தனர். மாணவர்களை தமிழக அரசின் சார்பில் அயலக நலம் மற்றும் மறுவாழ்வு துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார். பின்னர் அவரவா் சொந்த ஊர்களுக்கு தமிழக அரசின் செலவில் அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

தமிழக முதலமைச்சர் மத்திய அரசிற்கு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக தமிழக மாணவர்கள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறார்கள். இது வரை சுமார் 88 மாணவர்கள் வந்துள்ளார்கள். மாணவர்களை இல்லம் சேரும்வரை தமிழக அரசின் பாதுகாப்பில் இருப்பார்கள். 
பதிவு செய்யும் மாணவர்களை தூதரகத்திற்கு அனுப்பி அவர்களை விரைவாக மீட்டு வருகிறோம் என தெரிவித்தார். விமான நிலையத்தில் உக்ரைனில் இருந்து வந்த மாணவ- மாணவிகள் கூறுகையில், உக்ரைனில் உள்ள பல்கலைக்கழகத்தில் இருந்து ஹங்கேரி நாட்டு எல்லைக்கு சென்றோம். பின்னர் அங்கிருந்து இந்திய தூதரகம் எங்களை பத்திரமாக டெல்லிக்கு அழைத்து வந்தனர். டெல்லியில் இருந்து தமிழக அரசு அதிகாரிகள் அழைத்து வந்தனர். 

இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் செஞ்சி மஸ்தான், தமிழக அரசு அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
நாங்கள் இங்கே பாதுகாப்பாய் வந்து விட்டோம். ஆனால் இன்னும் நிறைய மாணவர்கள் உக்ரைன் தலைநகரங்களில் ஆபத்தான நிலையில் உள்ளார்கள். எனவே விரைவில் அவர்களை மீட்டு கொண்டுவர வேண்டும். போர் நடக்கும் போது எங்களுக்கு வீடியோ கால் மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் பேசி உறுதுணையாக இருந்தார். எங்களுக்கு நம்பிக்கை அளித்தார்.  மேலும் இங்கு பத்திரமாக மீட்டு வந்த தமிழக அரசுக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர். எல்லை பகுதியில் இந்தியர்கள் என்றால் தாக்குகின்றனர். இதனால் தான் மிகவும் கஷ்டப்பட்டோம். என்றனர்.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பிய MLA மகன்..? வீடியோ வெளியிட்டு அண்ணாமலை விமர்சனம்
எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!