திமுக வெற்றி பெற்றால் அடுத்து எங்கள் ராஜ்ஜியம்தான்... தாறுமாறாய் அதிரடி கிளப்பும் தங்க தமிழ்செல்வன்..!

Published : Feb 02, 2019, 05:06 PM IST
திமுக வெற்றி பெற்றால் அடுத்து எங்கள் ராஜ்ஜியம்தான்... தாறுமாறாய் அதிரடி கிளப்பும் தங்க தமிழ்செல்வன்..!

சுருக்கம்

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவுடன் அமமுகவை இணைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் டி.டி.வி.தினகரன் அதனை மறுத்து வருகிறார். இந்நிலையில், தங்க தமிழ்செல்வன் திமுக வெற்றி பெற்றால் அடுத்து அதிமுக அமமுக இணைவது உறுதி என அவர் தெரிவித்துள்ளார்.  

அமமுக  கொள்கை பரப்பு செயலாளரான தங்க தமிழ் செல்வன் தனியார் தொலைக்காட்சி பேட்டியளித்தார். அப்போது, அதிமுகவுடன் அமமுக இணையுமா என்கிற கேள்விக்கு பதிலளித்த அவர், ’’தேர்தலில் அமமுக பெறுவாரியான இடங்களில் வெற்றிப் பெற்றால் அதிமுக தொண்டர்கள் எங்களுடன் வந்து இணைவார்கள். 

அதேபோல திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் அமமுக மற்றும் அதிமுக இணைந்துவிடும். ஏனென்றால் அதிமுகவில் இப்போது இருக்கும் தலைவர்கள் தேர்தலில் தோல்விக்குப் பின் ஒதுங்கிவிடுவார்கள். அதன்பிறகு அதிமுக தொண்டர்கள் அமமுகவில் வந்து இணைவார்கள். நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தொகுதி தேர்தல் வந்தால் நான் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவேன். அப்படி சேர்ந்துவராமல் நாடாளுமன்றத் தேர்தல் மட்டும் வந்தால் சூழ்நிலையை பொருத்தே என் முடிவு மாறுபடும்.

அதிமுக, பாஜக இடையே கட்டாயம் கூட்டணி அமையும். அப்படி அமையாவிட்டால் அதிமுக இன்னும் பெரிய நெருக்கடியை சந்திக்கும். ஏனென்றால் பாஜகவினால் கோடநாடு விவகாரம், ரைடுகள் போன்ற நெருக்கடிகளை அதிமுக சந்தித்து வருகிறது. அந்தவகையில் கூட்டணி அமையாவிட்டால் நெருக்கடிகள் அதிகமாகும்’’ என அவர் தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!