விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை வைத்து திமுக அரசியல் செய்தால், ஆட்சியை இழக்க நேரிடும்.. அண்ணாமலை எச்சரிக்கை

Published : Sep 01, 2021, 01:38 PM IST
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை வைத்து திமுக அரசியல் செய்தால், ஆட்சியை இழக்க நேரிடும்.. அண்ணாமலை எச்சரிக்கை

சுருக்கம்

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை வைத்து திமுக அரசியல் செய்தால், ஆட்சியை இழக்க நேரிடும் என பா.ஜ.க, மாநிலத் தலைவர் அண்ணாமலை  எச்சரிக்கை விடுத்துள்ளார்.   

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை வைத்து திமுக அரசியல் செய்தால், ஆட்சியை இழக்க நேரிடும் என பா.ஜ.க, மாநிலத் தலைவர் அண்ணாமலை  எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘விநாயகர் சிலையை வீட்டில் வைத்து வழிபட அனுமதி கொடுப்பதற்கு நீங்கள் யார்?; விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கும் அரசு, டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்திருப்பது ஏன்?" கொரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ள மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில்கூட விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களை கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. எனவே தமிழக அரசு மக்களுடைய பாரம்பர்யப் பழக்கங்களையும், உணர்வுகளையும் மதிக்கக்கூடிய வகையில் தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு கட்டுப்பாடுகளுடன்கூடிய அனுமதி அளிக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை வைத்து திமுக அரசியல் செய்தால், ஆட்சியை இழக்க நேரிடும்

அதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழகத்தில் அதிமுக- பாஜக இரண்டு கட்சிகளும் தமிழகத்தின் நலனுக்கான விஷயங்களில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. வரும் உள்ளாட்சி தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும்’’என அவர் தெரிவித்தார்

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!