ஜாதி, மத வெறியைத் தூண்டும் மோகன் ஜி..? ருத்ர தாண்டவம் படத்திற்கு எதிராக டிஜிபி அலுவலகத்தில் புகார்..

By Ezhilarasan BabuFirst Published Sep 1, 2021, 1:16 PM IST
Highlights

தொடர்ந்து பேசிய அவர், இதுபோன்ற திரைப்படங்கள் மூலம் தொடர்ந்து மக்கள் மனதில் ஜாதி, மத வெறியைத் தூண்டிவிட்டு ஒற்றுமையை குலைக்க நினைக்கும் இயக்குநர் மோகன் ஜி மீது கிரிமினல் நடவடிக்கை எடுத்து கைது செய்வதோடு, "ருத்ர தாண்டவம்" திரைப்படத்தையும் தடைசெய்ய வேண்டும் என வலியுறுத்தி டி.ஜி.பி-யிடம் புகார் அளித்துள்ளதாகவும் கூறினார்

கிறிஸ்தவர்களை அச்சுறுத்தி, மதக்கலவரங்களை தூண்டும் வகையில் எடுக்கப்பட்டுள்ள "ருத்ர தாண்டவம்" திரைப்படத்தை தடை செய்து, இயக்குநர் மோகன் ஜி-யை கைது செய்ய வலியுறுத்தி சிறுபானமை மக்கள் நல கட்சி சார்பில் டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் "ருத்ர தாண்டவம்" திரைப்படத்தை தடை செய்யக்கோரி புகார் அளித்தபின் சிறுபான்மை மக்கள் நல கட்சி தேசிய தலைவர் சாம் ஏசுதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 

கிறிஸ்தவர்கள் மதம் மாற்றுகிறார்கள் எனக்கூறி உண்மைக்கு புறம்பான கருத்துக்களை "ருத்ர தாண்டவம்" திரைப்படம் மூலம் இயக்குநர் மோகன் ஜி மக்கள் மனதில் பதியவைக்க முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டினார். மேலும், அமைதியான முறையில் ஜாதி, மத, பேதமின்றி தமிழகத்தில் வாழ்ந்து வரும் கிறிஸ்தவ மக்களை தனிமைப்படுத்தி அச்சுறுத்தும் படமாக "ருத்ர தாண்டவம்" திரைப்படம் அமைந்துள்ளது எனவும்,  இந்த திரைப்படத்தின் மூலம் மதக் கலவரங்கள் வெடிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இதுபோன்ற திரைப்படங்கள் மூலம் தொடர்ந்து மக்கள் மனதில் ஜாதி, மத வெறியைத் தூண்டிவிட்டு ஒற்றுமையை குலைக்க நினைக்கும் இயக்குநர் மோகன் ஜி மீது கிரிமினல் நடவடிக்கை எடுத்து கைது செய்வதோடு, "ருத்ர தாண்டவம்" திரைப்படத்தையும் தடைசெய்ய வேண்டும் என வலியுறுத்தி டி.ஜி.பி-யிடம் புகார் அளித்துள்ளதாகவும் கூறினார். மேலும், மதக் கலவரங்களைத் தூண்டும் இத்தகைய செயல்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


 

click me!