
அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தமிழகத்தில் அதிகஇடங்களில் வெற்றி பெறும் எனவும் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெற்றால் அதிமுகவிற்குதான் பிரச்னை வரும் எனவும் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் தேர்தலில் நோட்டாவை விட குறைவாக வாக்குகளை வாங்கியதால், அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரே மாதிரியாக கடுமையாக கலாய்த்து வருகின்றனர்.
இது போதாதுன்னு சமூக வலைதளங்களில் மீம்ஸ் போட்டு வருத்தெடுக்கின்றனர் வலைதளவாசிகள். என்னதான் இவர்கள் எல்லாம் ஒட்டு மொத்தமாக கூடி வந்து கலாய்த்தாலும் எல்லோரையும் சமாளித்து பேசுவதில் தமிழிசையை அடித்துக்கொள்ள முடியாது.
வெளியில் உள்ளவர்களை சமாளித்தாலும், தமிழக பாஜகவில் நடக்கும் உட்கட்சி அரசியலை சமாளிக்க முடியவில்லையாம் தமிழிசையால்.
ஆரம்பத்தில் இருந்தே தமிழிசைக்கும், மத்திய அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் இடையில் சில மன வருத்தங்கள் இருந்து வருவதாக கூறப்படுகிறது. தமிழிசை சொல்வதை பொன்னார் ஆட்கள் கேட்பதே இல்லையாம். சமூக வலைத்தளங்களில் அருவறுக்கத்தக்க வகையில் மீம்ஸ்கள் வந்தவண்ணம் உள்ளது.
அதன் பிறகு வந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சமயத்தில், பிரசாரத்துக்குப் போன இடங்களில் எல்லாம் தமிழிசையை பொன்னார் ஆட்கள் கலாய்த்துள்ளார்களாம். அதுமட்டுமல்ல, தமிழிசையின் பிரச்சாரம் எடுபடாமல் போக பாஜகவிற்கு எதிராக பிரசாரம் செய்தார்களாம்.
இதனால் ஆர்.கே.நகரில் நோட்டாவை விட குறைவான வாக்குகளையே பெற்று பாஜக படுதோல்வி அடைந்தது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தமிழகத்தில் அதிகஇடங்களில் வெற்றி பெறும் எனவும் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெற்றால் அதிமுகவிற்குதான் பிரச்னை வரும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே பாஜக தலைமையில்தான் அதிமுக செயல்பட்டு வருகின்றது என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் தமிழிசையோ அனைத்து விவகாரங்களிலும் அதிமுகவை ஆதரித்து போவதையே வாடிக்கையாக வைத்துள்ளார் என விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது.