இந்த இடத்தில மட்டும் கலைஞர் நூலகம் கட்டினால் அதனை அதிமுக எதிர்க்கும்... ராஜன் செல்லப்பா உறுதி..!

By Thiraviaraj RMFirst Published Aug 5, 2021, 4:55 PM IST
Highlights

ரூ.70 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நூலகம் கட்ட மதுரையை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மதுரையில் அமைச்சர்கள் ஆய்வு செய்த 7 இடங்களும் ஏற்புடையதல்ல.

பென்னிகுவிக் இல்லத்தில் கலைஞர் நூலகம் கட்டினால் அதனை அதிமுக எதிர்க்கும் என திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.
 
மதுரை மாவட்டம், மேலூரில் அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ.,வும், மதுரை கிழக்கு அதிமுக மாவட்ட செயலாளருமான வி.வி.ராஜன்செல்லப்பா கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திமுக நிதிநிலை அறிக்கையில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யும். இது முரணானது. இது தவறான நோக்கோடு அளிக்கப்படும் அறிக்கையாக நாங்கள் கருதுகின்றோம். ரூ.70 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நூலகம் கட்ட மதுரையை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மதுரையில் அமைச்சர்கள் ஆய்வு செய்த 7 இடங்களும் ஏற்புடையதல்ல.

விவசாயிகள் போற்றக்கூடிய பென்னிக்குவிக் வாழ்ந்த இடத்தை அரசு அதிகாரிகளின் தவறான கருத்தை வைத்து அந்த இடத்தை தேர்வு செய்கின்றனர். தகுதியான இடத்தை தேர்ந்தெடுத்து கலைஞர் நூலகத்தைக் கட்டலாம், பென்னிகுவிக் வாழ்ந்த இடத்தில் நூலகம் கட்ட முயற்சித்தால் அதிமுக அதை எதிர்க்கும்”என அவர் தெரிவித்தார். 

click me!