தமிழகத்தில் வேவுபார்க்கப்பட்டிருந்தால் முதல்வர் சாதாரணமாக விடமாட்டார்.. அமைச்சர் எச்சரிக்கை.

Published : Aug 12, 2021, 01:52 PM IST
தமிழகத்தில் வேவுபார்க்கப்பட்டிருந்தால் முதல்வர் சாதாரணமாக விடமாட்டார்.. அமைச்சர் எச்சரிக்கை.

சுருக்கம்

பெகாசஸ் விவகாரத்தை தொடர்ந்து, இணைய தரவுகள் திருடப்படுவது மற்றும் இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல் கையாள்வது குறித்த பயிற்சி தமிழக தகவல் தொழில்நுட்ப துறை  பணியாளர்களுக்கும் மற்றும் கணினிகளை கையாளும் அரசு ஊழியர்களுக்கு  வழங்கப்படுகின்றன எனக்கூறிய அமைச்சர், 

தமிழகத்தில் யாரேனும் வேவுபார்க்கப்பட்டிருந்தால் முதல்வர் சாதாரணமாக விடமாட்டார் எனவும், நாம் கருத்துசுதந்திர மிக்க தமிழ் நாட்டில் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறோம் எனவும், காங்கிரஸ் ட்விட்டர் கணக்கு முடக்கம் வன்மையாக  கண்டிக்கத்தக்கது எனவும், தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். சென்னை பாரிமுனையில் தென்னிந்திய வர்த்தக  மையத்தில் சுகாதாரத்துறையில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் பற்றிய கருத்தரங்கை தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 

செயற்கை நுண்ணரிவை சுகாதாரத்தில் பயன்படுத்துவதற்கு தமிழகத்தில் வாய்ப்புகள் நிறைய உள்ளதாகவும், இதுகுறித்த அறிவாற்றல் உள்ள இளைஞர்கள் தமிழகத்தில் நிறைய உள்ளனர் எனக்கூறினார். பாரத் நெட் டெண்டரில்  முறைகேடுகள் உள்ளது எனக்கூறி தான் ரத்து செய்யப்பட்டது. தற்போது இதில் இரண்டு தொகுப்புகளுக்கான பணிகள் தொடங்கியுள்ளது. நீதிமன்றம் தீர்ப்பு வந்தவுடன் மீதமுள்ள இரண்டு தொகுப்புகளுக்கான பணிகளும் தொடங்கும் எனவும் பணிகள் முடிந்த உடன் தடையில்லா இணைய சேவை அனைத்து கிராமங்களுக்கும் கிடைக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். 

பெகாசஸ் விவகாரத்தை தொடர்ந்து, இணைய தரவுகள் திருடப்படுவது மற்றும் இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல் கையாள்வது குறித்த பயிற்சி தமிழக தகவல் தொழில்நுட்ப துறை  பணியாளர்களுக்கும் மற்றும் கணினிகளை கையாளும் அரசு ஊழியர்களுக்கு  வழங்கப்படுகின்றன எனக்கூறிய அமைச்சர், தமிழகத்தில் யாரேனும் வேவுபார்க்கப்பட்டிருந்தால் நம் முதல்வர் அதை சாதாரணமாக விடமாட்டார் எனவும், அந்த அளவிற்கு பாதுகாப்பு நிறைந்த மாநிலத்தில் நாம் வாழ்ந்து கோண்டிருக்கிறோம் எனவும் அமைச்சர் கூறினார்.  

 

PREV
click me!

Recommended Stories

பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை மிகமிக இழிவாக பேசும் திமுக கூட்டம்..!
பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள் தானா? நிபந்தனையோடு இபிஎஸிடம் இறங்கி வந்த அமித் ஷா..!