Breaking News: அதிமுகவினரை காப்பாற்ற 6 பேர் கொண்ட சட்ட ஆலோசனை குழு.. ஓபிஎஸ்-இபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு..

By Ezhilarasan BabuFirst Published Aug 12, 2021, 1:36 PM IST
Highlights

நம் அரசியல் எதிரிகளால் காழ்ப்புணர்ச்சியோடு பொய் வழக்குகளை பதிவு செய்யும்போது, அத்தகையவர்களுக்கு இந்த கழக சட்ட ஆலோசனைக்குழு, அந்த வழக்குகளுக்கான அனைத்து சட்ட உதவிகளையும் முழுமையாக செய்யும்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சி பிரதிநிதிகளுக்கு எதிராக தொடுக்கப்படும் வழக்கங்களை எதிர்கொள்ள " சட்ட ஆலோசனை குழு " அமைத்து  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது :-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் பலர் மீது, ஆளும் கட்சியினரின் தூண்டுதலால் பழிவாங்கும் எண்ணத்தோடு போய் வழக்கு புனையப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கழக பணிகளிலும், மக்கள் பணிகளிலும், அல்லும் பகலும் அயராது ஈடுபட்டுவரும் கழகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றென்றும் பாதுகாப்பு அரணாகத் திகழும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம். 
அரசியல் காழ்ப்புணர்ச்சியால், திமுகவினரின் தூண்டுதலால், கழகத்தினர் மீது தொடுக்கப்படும் பொய் வழக்குகளை, சட்டரீதியாக எதிர்கொள்ளும் வகையில் கழகத்தின் சார்பில் கழக சட்ட ஆலோசனை குழு கீழ்கண்டவாறு அமைக்கப்படுகிறது:

1. டி ஜெயக்குமார், பி.எஸ்.சி, பி.எல்,  கழக வழிகாட்டு குழு உறுப்பினர்,  கழக அமைப்புச் செயலாளர், வடசென்னை தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர்.

2. திரு என் தளவாய்சுந்தரம் பி.எஸ்.சி,  பி.எல், எம்.எல்.ஏ, அவர்கள். கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர்.

3.திரு. சி.வி, சண்முகம், பி.ஏ, பி.எல் அவர்கள், கழக வழிகாட்டு குழு உறுப்பினர், விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர்.

4. பி.எஸ் மனோஜ் பாண்டியன், எம்.ஏ, எம்.எல்.ஏ அவர்கள். கழக வழிகாட்டு குழு உறுப்பினர், கழக அமைப்புச் செயலாளர்,

5. ஐ.எஸ். இன்பதுரை, பி.ஏ, பி. எல் முன்னாற் எம்.எல்.ஏ அவர்கள், கழக தேர்தல் பிரிவு துணைச் செயலாளர், கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர்.

6. ஆர்.எம். பாபு முருகவேல், பி.ஏ,  பி.எல், முன்னாள் எம்.எல்.ஏ, அவர்கள், கழக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர், கழக செய்தி தொடர்பாளர். 

ஆகிய 6 பேரும், நம் அரசியல் எதிரிகளால் காழ்ப்புணர்ச்சியோடு பொய் வழக்குகளை பதிவு செய்யும்போது, அத்தகையவர்களுக்கு இந்த கழக சட்ட ஆலோசனைக்குழு, அந்த வழக்குகளுக்கான அனைத்து சட்ட உதவிகளையும் முழுமையாக செய்யும். எனவே கழக உடன்பிறப்புகள் மேற்கண்ட குழுவினரை தொடர்பு கொண்டு உரிய தீர்வு காணுமாறு கேட்டுக் கொள்கிறோம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

click me!