மீண்டும் வருகிறது அம்மா குடிநீர்? அமைச்சர் ராஜகண்ணப்பன் சொன்ன முக்கிய தகவல்..!

Published : Aug 12, 2021, 01:03 PM IST
மீண்டும் வருகிறது அம்மா குடிநீர்? அமைச்சர் ராஜகண்ணப்பன் சொன்ன முக்கிய தகவல்..!

சுருக்கம்

திமுக ஆட்சியில் போக்குவரத்து துறை புது பொழிவு பெரும் என்றும் பழைய பேருந்துகள் அகற்றப்பட்டு, ஜெர்மனி நாட்டுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதன்படி விரைவில் 2500 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்றார்.

வண்டலூர் அருகே கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் விரைவில் கட்டி முடிக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.

சென்னை மேற்கு சைதாப்பேட்டையில் புதிய வழித்தடங்கள் மற்றும் நிறுத்தப்பட்ட வழித்தடங்களில், 23 மாநகரப் பேருந்துகள் இயக்கத்தினை, போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்  மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்;- தமிழகத்தில் போக்குவரத்து துறை நஷ்டத்தில் சென்றாலும், மக்கள் நலனில் அக்கறையோடு  செயல்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சியில் நிர்வாக சீர்கேடு காரணமாக கடன் சுமை ஏற்பட்டுள்ளது.

 திமுக ஆட்சியில் போக்குவரத்து துறை புது பொழிவு பெரும் என்றும் பழைய பேருந்துகள் அகற்றப்பட்டு, ஜெர்மனி நாட்டுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதன்படி விரைவில் 2500 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்றார். போக்குவரத்து துறை  நிதி சுமையில் இருந்த போதும் பேருந்துக் கட்டணங்களை உயர்த்தும்  எண்ணம் தற்போது இல்லை. தேவையற்ற செலவுகளை குறைத்து வருகிறோம் தமிழகத்தில் 40% பெண்கள் பயன்ப டுவர் என்ற அடிப்படையில்  இலவச பேருந்து பயணம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் தற்பொழுது 61% பெண்களுக்கு  திட்டம் பயன்படுகிறது. இதுவரை 9.20 லட்சம் மகளிர் பயனடைந்துள்ளனர். நாளொன்றுக்கு 30 லட்சம் மகளிர் பயணடைந்து வருகின்றனர். இதனால் கூடுதலாக 150 கோடி ஒதுக்க வேண்டியுள்ளது என தெரிவித்தார்.

இதற்கு முன் பேருந்து நிறுத்தங்களில் அம்மா குடிநீர் விற்பனை செய்யப்பட்டது. ஏற்கனவே அம்மா குடிநீர் திட்டம் குறித்து கும்மிடிப்பூண்டியில் ஆய்வு செய்தோம். மீண்டும் அதேபோல், விற்பனை செய்ய ஆலோசனை செய்து வருகிறோம். இதற்கான இறுதிக்கட்ட ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக முதல்வரிடமும் தெரிவித்திருக்கிறோம். ஆய்வறிக்கை வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், வண்டலூர் அருகே கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் விரைவில் கட்டி முடிக்கப்படும். பழைய பேருந்துகள் அகற்றப்பட்டு புதிய பேருந்துகள் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!