அடுத்த 2 வாரம் மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் போதும்.. கோவிட்டை ஓடவிடலாம்.. ராதாகிருஷ்ணன் அட்வைஸ்.

By Ezhilarasan BabuFirst Published Jan 15, 2022, 3:24 PM IST
Highlights

அடுத்த 2 வாரம் பொது மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்தால் தொற்று அதிகரிப்பதை குறைக்கலாம் என்ற அவர், கொரொனா தொற்றை குறைக்க வேண்டும் என்பதற்காக தான் கடற்கரைகளுக்கு பொது மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது ஆனால் பொது மக்கள் அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் பட்டினம்பக்கம் கடற்கரைகளுக்கு சென்றால் தொற்று பாதிப்பு எப்படி குறையும் என்றார்.

அடுத்த 2 வாரம் பொது மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்தால் தொற்று அதிகரிப்பதை படிபடியாக குறைக்கலாம் என மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சென்னை டி. எம். எஸ் வளாகத்தில் உள்ள கட்டளை மையத்தை ஆய்வு மேற்கொண்ட பின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஒமைக்ரான் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்திய அளவில் 2.68 லட்சம் பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 22 ஆயிரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பொது மக்களின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என்றார்.  

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டளை மையம் செயலடுத்த முதல்வர் அறிவுறுத்தி இருக்கிறார். தமிழகத்தில் மட்டும் மொத்தம் 1.91 லட்சம் படுக்கைகள் உள்ளது, அதில் 1.28 லட்சம்  படுக்கைகள் கொரொனாவுக்கு மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. அதில் தற்போது,  8595 படுக்கைகள் 7 விழுக்காடு மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் ஒமைக்ரான் மட்டும் இல்லமால் 10-15 விழுக்காடு டெல்டா பரவி வருகிறது என்றார். மேலும், ஒமைக்ரான் பொறுத்தவரை தடுப்பூசி போடதவர்கள், முதியவர்கள், கூட்டத்தில் இருப்பவர்களுக்கு பாதிப்பு அதிகமாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அறிகுறிகள் உள்ளவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். 

தமிழகத்தில் 63 லட்சம் பேர் 18-44 வயதுடையவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை என்ற அவர், 80 % பேர் 15-18 வயதுடையவர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர் என்றார். தொடர்ந்து பேசிய அவர், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.

மருத்துவ பணியாளர்கள் 5.65 உள்ள நிலையில் 29 ஆயிரம் பேரும், முன்கள பணியாளர்கள் 9.78 லட்சம் பேர் உள்ள நிலையில் 22 ஆயிரம் பேரும், 60+ வயதிற்கு மேற்பட்டவர்கள் 24 ஆயிரம் பேர் தான் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். அடுத்த 2 வாரம் பொது மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்தால் தொற்று அதிகரிப்பதை குறைக்கலாம் என்ற அவர், கொரொனா தொற்றை குறைக்க வேண்டும் என்பதற்காக தான் கடற்கரைகளுக்கு பொது மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது ஆனால் பொது மக்கள் அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் பட்டினம்பக்கம் கடற்கரைகளுக்கு சென்றால் தொற்று பாதிப்பு எப்படி குறையும் என்றார். மேலும், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் பொது மக்கள் மருந்தகங்களில் மருந்து வாங்கி சாப்பிடக் கூடாது. அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
 

click me!