தமிழர் திருநாளில் தெறிக்கவிட்ட குடிமகன்கள்.. சென்னையை ஓரங்கட்டிய மதுரை.. 317 கோடிக்கு மது விற்பனை..

By Ezhilarasan BabuFirst Published Jan 15, 2022, 3:11 PM IST
Highlights

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் மற்றும் உருமாறிய  ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. அதேபோல் திருவள்ளுவர் தினம் என்பதால் இன்றும் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று டாஸ்மாக் மதுபான கடைகளில் கூட்டம் அலைமோதியது. 

தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 317 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 68.76 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது.

உலகமெல்லாம் பரவிக்கிடக்கும் தமிழர்களால் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒமைக்ரான் கொரோனா வைரஸ் தொற்று மனித சமூகத்தை வாட்டி வதைத்து வரும் நிலையில், பொங்கல் பண்டிகை நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடைமுறைகளுக்கு இடையில் கொண்டாடப்பட்டு வருகிறது. தொடர் வைரஸ் தொற்று அதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு என பல நெருக்கடிகளுக்கு மத்தியில் உற்சாகமூட்டும் பண்டிகையாக பொங்கல் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. வழக்கமாக பொங்கல் பண்டிகை என்றால் உற்சாகத்திற்கு மகிழ்ச்சிக்கும் பஞ்சம் இருக்காது. இந்நிலையில்  நெற்களஞ்சியமான கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருச்சி, மதுரை, கோவை என விவசாயிகள் மத்தியில் பொங்கல் பண்டிகை வழக்கத்துக்கு மாறாக உற்சாகம் இழுந்து காணப்படுகிறது.

குறிப்பாக கரும்பு விவசாயிகள் விற்பனை இல்லாமல் கடும் துயரத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். பல்வேறு சந்தைகளில் கரும்புகள் லாரி லாரியாக விற்பனைக்கு கொண்டுவரப்படும் கரும்பு வாங்க மக்கள் ஆர்வம் காட்டாததால் விவசாயிகளின் பொங்கள் மகிழ்ச்சியற்ற பொங்கலாக மாறியுள்ளது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வது வழக்கம், ஆனால் விவசாயிகளின் வாழ்க்கைக்கு வழி திறக்காத வேதனை பொங்கல் ஆகவே இது இருக்கிறது என விவசாயிகள் கவலை தெரிவித்து வருகின்றனர். அதேபோல காய்கறி, மஞ்சள் விற்பனையும் மந்தமாகவே இருப்பதாக விவசாயிகள் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். விவசாயிகளுக்கு இது விடியா பொங்கலாக மாறியுள்ள நிலையில் டாஸ்மாக் விற்பனையை அதற்கு எதிர்மாறாக ஆமோக விற்பனை நடந்துள்ளது. அந்தவகையில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையான நேற்று ஒரே நாளில் 317.08  கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் மற்றும் உருமாறிய  ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. அதேபோல் திருவள்ளுவர் தினம் என்பதால் இன்றும் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று டாஸ்மாக் மதுபான கடைகளில் கூட்டம் அலைமோதியது. தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 317.08 கோடி ரூபாய் அளவிற்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூபாய் 68. 76  கோடி ரூபாய்க்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது, சென்னை மண்டலத்தில் ரூ.59.28 கோடி, திருச்சி மண்டலத்தில் 65.52 கோடி, சேலம் மண்டலத்தில் ரூ.63.87 கோடி, மதுரை மண்டலத்தில் ரூ.68.76 கோடி, கோவை மண்டலத்தில் 59.65 கோடி என மொத்தம் ரூ.317.08 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. மொத்தத்தில் உழவர் திருநாளான பொங்கலில் வியாபாரம் இன்று, போதிய வருமானமின்றி உழவர்கள் வறுமையில் தவித்து வரும் நிலையில், உற்சாக பான பிரியர்களால் டாஸ்மாக் விற்பனை உச்சத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

click me!