அன்புமணி முதல்வராக வாழ்த்துக்கள்... பாராட்டுகள்.. செம்ம நக்கலாக சிரித்துக் கொண்டே கலாய்த்த வேல்முருகன்.

By Ezhilarasan BabuFirst Published Jan 15, 2022, 1:58 PM IST
Highlights

2026 ஆம் ஆண்டில் பாமக தலைமையில் தனி அணி அமைக்கப்படும் என்றும் அன்புமணி  ராமதாஸ் முதல்வராக்கபடுவார் என்றும் பாமக கூறிவருகிறது என  நக்கலாக சிரித்தபடியே பேசிய வேல்முருகன், 2001இல் அன்புமணியை முதல்வர் ஆக்குவோம் ஆட்சியைப் பிடிப்போம் என்றார்கள். அதைத்தொடர்ந்து 2011-ம் ஆண்டு அப்படியே கூறினார்கள், 2016ல் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றனர். 

அன்புமணி ராமதாஸ் அவர்கள் முதல்வர் ஆவதற்கு எனது வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் என  தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி. வேல்முருகன் கூறியுள்ளார். 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாமக தலைமையில் தனி அணி அமைக்கப்படும் என்றும், அன்புமணி ராமதாஸ்  தலைமையில் பாமக ஆட்சி அமைக்கும் என ராமதாஸ் கூறிவரும் நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  

கடந்த காலங்களில் அதிமுக- திமுக என இரண்டு  கட்சிகளுடனும் மாறி மாறி கூட்டணி அமைத்து சொந்த சாதி மக்களை வைத்து அரசியல் செய்யும் ராமதாஸ் தனது குடும்பத்தை வளம் மிக்கதாக மாற்றிக் கொண்டாரே தவிர  தான் சார்ந்த சமுதாயத்திற்கும், தன் சமுதாய மக்களுக்கும் எந்த நன்மையும் அவர் செய்யவில்லை என்ற விமர்சனம் அவர் மீது இருந்து வருகிறது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் வன்னியர்களே பாமகவை புறக்கணித்து வரும் நிலையும் இருந்து வருகிறது. கடந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் அதிமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணியிலிருந்த பாமக திடீரென கடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. பாமகவுக்கு சொல்வாக்கு மிகுந்த பகுதிகளில் தேர்தல் நடந்ததால் பாமக இந்த முடிவு எடுத்தது. தனித்து களமிறங்கியது பாமகவால் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெற முடியவில்லை. 

வன்னிய மக்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதிகளிலேயே தங்கள் கட்சியால் வெற்றி பெற முடியவில்லை என்பது அக்காட்சியை தலைமைக்கு பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. அப்படி என்றால் வன்னியர் மக்களே பாமகவை முழுவதுமாக இன்னும் அங்கிகரிக்க வில்லை என்பது இதன் மூலம் நிரூபணமாகி இருப்பதாக பல்வேறு அரசியல் கட்சிகள் பாமகவை விமர்சித்துவருகின்றன. நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தலில் பாமக போட்டியிட்ட பகுதிகளில் ஒட்டுமொத்த வன்னிய மக்களும் பாமகவுக்கு வாக்களித்திருந்தால் அக்காட்சி அதிக பெரும்பான்மையில் வெற்றி பெற்றிருக்க முடியும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை என்பதே நிதர்சனம். இந்நிலையில் எதிர்வரும் நகராட்சி மன்ற தேர்தலிலாவது எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஈடுபட்டு வருகிறார்.

அதேபோல கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 24 இடங்களை பெற்றாலும், அதில் போதிய அளவிற்கு அக்கட்சியால் வெற்றி பெற முடியவில்லை. எனவே ராமதாஸ் கலந்துகொள்ளும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அதற்கான அதிருப்தியை அவர் வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக கூட்டணியில் இருந்த அதிமுக பாமகவுக்கு துரோகம் செய்ததுவிட்டது, பாமகவின் வாக்கு வங்கியை அதிமுக அறுவடையை செய்ததே தவிர, அதிமுக வாக்கு பாமகவுக்கு விழவில்லை என அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகிறார்.

இது அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. அதேநேரத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாசை மீண்டும் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தும் முயற்சியில் பாமக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில்தான் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் புத்தாண்டு தலைமை சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் பா.ம.க தலைமையில் தனி அணி அமைக்கப்படும். பாமகவின் தலைமையை ஏற்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி இருக்கும்,  நகர்புற பேரூராட்சி தேர்தலிலும் அனைத்து இடங்களிலும் பா.ம.க போட்டியிடும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாமகவில் 2011 ஆம் ஆண்டுக்கு முன்புவரை ராமதாசின் நம்பிக்கைக்குரிய தளபதியாக இருந்து பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து வெளியேறி தமிழர் வாழ்வுரிமை கட்சியை என்ற தனிக் கட்சித் தொடங்கி நடத்தி வரும் தி. வேல்முருகன் 2026 ஆம் ஆண்டு பாமக தலைமையில் ஆட்சி என்ற முழக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி கொடுதுள்ள அவர் கூறியிருப்பதாவது:- 

பாமகவில் இருந்து வெளியேறிய பிறகு என்னை பலரும் மீண்டும் கட்சியில் இணைப்பதற்கான முயற்சிகளில் என்னை அனுகினர். இந்நிலையில் அந்த கட்சியில் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் அக்கட்சியில் இணைப்பதற்கான முயற்சியை அக்கட்சித் தலைமை எடுத்து வரும் நிலையில், மருத்துவர் ராமதாசுக்கு நெருக்கமான ஒருவர் நீங்கள் ஏன் தனி கட்சியாக இருக்க வேண்டும், மீண்டும் பாமகவில் இணையலாம் வாருங்கள் என அழைத்தார். அதேபோல  ராமதாசுக்கு நெருக்கமான பிரபல சினிமா இயக்குனர் ஒருவர் ஒரே சாதிக்குள் எதற்கு சண்டை போட்டுக் கொண்டிருக்க வேண்டும்? வாருங்கள் மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறேன் என கூறினார். அந்தக் கட்சியில் இருந்து நானாக வெளியேறவில்லை, என்னை அவர்கள் வெளியேற்றினார்கள், அந்தக் காட்சித் தலைமைக்கோ, கட்சிக்கோ துரோகம் செய்து விட்டு நான் வெளியேற வில்லை, அவர்களாகவே என்னை வெளியேற்றினார்கள். இந்த நிலையில் மீண்டும் அந்த இடத்திற்குப் போவது சரியல்ல எனவே மீண்டும் கட்சியில் இணைக்கும் நோக்கத்துடன் என்னை அணுக வேண்டாம் என கூறிவிட்டேன்.

2026 ஆம் ஆண்டில் பாமக தலைமையில் தனி அணி அமைக்கப்படும் என்றும் அன்புமணி  ராமதாஸ் முதல்வராக்கபடுவார் என்றும் பாமக கூறிவருகிறது என  நக்கலாக சிரித்தபடியே பேசிய வேல்முருகன், 2001இல் அன்புமணியை முதல்வர் ஆக்குவோம் ஆட்சியைப் பிடிப்போம் என்றார்கள். அதைத்தொடர்ந்து 2011-ம் ஆண்டு அப்படியே கூறினார்கள், 2016ல் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றனர். இப்போது 2026 ல் அன்புமணி தலைமையில் ஆட்சியை பிடிப்போம் என்கிறார்கள். இப்படி சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் என்பதற்காகத்தான் சிரிக்கிறேன்...  என்னைப் பற்றி அவர்கள் மிகவும் தரம் தாழ்ந்த கடுமையான வார்த்தைகளில் பேசி இருக்கிறார்கள் அதை எல்லாம் நான் கூற விரும்பவில்லை. ஆனால் அன்புமணி முதலமைச்சராவதற்கு எனது வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்... என அவர் கூறினார்.  பாட்டாளி மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என அழைக்கப்பட்டு இருக்கிறதே நீங்கள் அவர்களுடன் கூட்டணி செல்வீர்களா என நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தற்போதைக்கு அப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழர் வாழ்வுரிமை கட்சி இல்லை என வேல்முருகன் கூறினார். 
 

click me!