கடவுளுக்கோ, தமிழுக்கோ தீங்கு என்றால் அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம்: பாஜக தலைவர் எல் முருகன்

By T BalamurukanFirst Published Nov 5, 2020, 10:07 PM IST
Highlights

வேல் யாத்திரைக்கு தமிழகத்தில் அனுமதியில்லை என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.பாஜக கூட்டணியில் அதிமுக இருந்தாலும் வேல்யாத்திரைக்கு அனுமதி மறுத்திருப்பதால் பாஜக அப்செட்டாகி இருக்கிறது. அதற்காக  தமிழக மாநில தலைவர் எல்.முருகன் அவசர அவசரமாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தை கூட்டினார்.

அந்த கூட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன், பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் சிடி.ரவி, மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், மாநில துணைத்தலைவர் எம்.என்.ராஜா, நயினார் நாகேந்திரன், பொது செயலாளர் கரு.நாகராஜன், ஜிகே செல்வகுமார், கே.டி.ராகவன் ஆகியோர் கலந்துகொண்டனர். வெற்றிவேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ள நிலையில், பாஜகவினர் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் முருகன், “என்ன நடந்தாலும் வேல் யாத்திரை துள்ளிவரும். பாஜகவினர் ஒருபோதும் சட்டத்தை மீறுபவர்கள் அல்ல. கடவுளுக்கோ, தமிழுக்கோ தீங்கு என்றால் அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம். நாங்கள் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்போகிறோம்” எனக் கூறினார்.

click me!