சட்டமன்றத்தேர்தலில் அதிமுக தனித்தே போட்டி.. ஆரூடம் சொல்லும் திருமாவளவன்..!

By T BalamurukanFirst Published Nov 5, 2020, 9:49 PM IST
Highlights

சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவை கழட்டி விட்டு தனியாக தேர்தலை சந்திக்க அதிமுக திட்டமிட்டுள்ளது. அதற்காக தான் 7.5% இட ஒதுக்கீட்டில் ஆளுநர் ஒப்புதல் இல்லாமலேயே தனியாக முடிவு எடுத்து இருக்கிறார்கள். அதேபோல் பாஜகவுக்கு எதிராக வேல் யாத்திரையையும் ரத்து செய்து இருக்கிறது.எனவே பாஜகவை அதிமுக கழற்றி விடவே இதுபோன்ற முடிவை எடுத்திருக்கிறது என்று அரூடம் சொல்லுகிறார் விசிக தலைவர் தொல்.திருமாவளவன்.
 
 இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், “சமூக வலைதளத்தை பயன்படுத்தி இந்துக்களுக்கு நாங்கள் துரோகம் செய்வது போல பாஜக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். தமிழ்நாடு மாதவெறியர்களுக்கான மண் இல்லை. கொரோனா நெருக்கடி இருப்பதால் வேல் யாத்திரையை நடத்தக் கூடாது என்று தமிழக அரசு துணிச்சலாக அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். இது ஒரு அரசியல் முடிவு தான் அதிமுக பாஜக அரசியல் உறவு இனி நீடிக்காது என்பது தான் புரிகிறது.

அதிமுக  பாஜக கட்சகளிடையே நட்பு விரிசல் ஏற்பட்டிருப்பது போல் தெரிகிறது.பாஜகவை கூட்டணியில் சேர்த்து கொள்வது எங்களுக்கு பிரச்சனை இல்லை, ஆனால் அது பாஜகவிற்கு தான் பிரச்சனை. திமுகவை அசைக்க முடியாது. என்று பாஜகவிற்கு தெரியும்.அதனால் தான் அதிமுகவை சுவாகா செய்ய முடியும் என்று நினைக்கிறது பாஜக.

சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவை கழட்டி விட்டு தனியாக தேர்தலை சந்திக்க அதிமுக திட்டமிட்டுள்ளது. அதற்காக தான் 7.5% இட ஒதுக்கீட்டில் ஆளுநர் ஒப்புதல் இல்லாமலேயே தனியாக முடிவு எடுத்து இருக்கிறார்கள். அதேபோல் பாஜகவுக்கு எதிராக வேல் யாத்திரையையும் ரத்து செய்து இருக்கிறது. வாழ்வின் ஒவ்வொரு அங்குலத்திலும் மனுஸ்மிருதி பங்குகொண்டு இருக்கிறது. கமல்ஹாசன் நிறைய படிக்க கூடியவர் மனுஸ்மிருதியில் இருப்பது அவருக்கு நன்றாக தெரியும். ஆனால் யாரை திருப்திப்படுத்த கமல் இப்படி பேசுகிறார் எனத் தெரியவில்லை” என தெரிவித்தார்.

click me!