செத்தால் நான் அமைச்சராகத் தான் சாவேன்... அதிமுகவில் சீனியர் அமைச்சர் மல்லுக்கட்டு..!

By Thiraviaraj RMFirst Published Dec 22, 2020, 1:23 PM IST
Highlights

ஒரு அமைச்சர், செத்தால் நான் அமைச்சராகத் தான் சாவேன்... எனக்கு சீட் கொடுத்தே ஆக வேண்டும் என உடும்புப் பிடியாக இருக்கிறார்’’என்கிறார்கள். 

அதிமுகவில் வாய் தவறி பேசும் அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைக்க, தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.  அதிமுக சீனியர் தலைவர்களில் சிலர், பொதுக்கூட்டம், பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது அடிக்கடி வார்த்தைகள் ஜெர்க்காகி விடுகிறார்கள். இதனால் மீம்ஸ்ல போட்டு கலாய்த்து வருகிறார்கள். இதனால் என்ன பேசுகிறோம் என தெரியாமல் பேசி சர்ச்சையில் சிக்கிக் கொண்டு, கட்சி தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தி வருவதாக உளவுத்துறை ரிப்போர்ட் ஒன்று சென்றுள்ளது. 

அதன் பிறகு மூத்த அமைச்சர்களில் சிலர் கடந்த சில மாதங்களாக வாய் திறப்பதே இல்லை. பொது நிகழ்ச்சிக்கு வந்தாலும் நலத்திட்ட உதவி கொடுத்துட்டு அத்தோடு சென்று விடுகிறார்கள். இந்நிலையில் சர்ச்சை அமைச்சர் ஒருவர், வாய் தள்ளாடினாலும் தனக்கு 2021ல் எம்எல்ஏ சீட் வேண்டும் எனக் கேட்டு வருகிறார். ஆனால் எடப்பாடியாரின் நலம் விரும்பிகள் சிலர், ‘இந்தத் தேர்தலில் உங்களை விட வயதில் சிறியவர்களுக்கு பதவி, சீட் கொடுத்தால் தான் அவர்கள் உங்கள் பேச்சை கேட்பார்கள். சீனியர்கள் கேட்க மாட்டார்கள். கூடுமான வரை ஜூனியர்களை களமிறங்குங்கள்’என்று அவருக்கு  அட்வைஸ் செய்து இருக்கிறார்கள். இதனால், கட்சியில் மாவட்ட வாரியாக தனது ஆதரவாளர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு மட்டும் சீட் கொடுக்க எடப்பாடியார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

சீனியர் அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைப்பது கஷ்டம். இதில் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்பட பல முக்கிய மாவட்டங்களில் உள்ள சீனியர்களை கட்சி பணிக்கு திருப்பி விட திட்டமிட்டு இருக்கிறார்கள். இதில் ஒரு அமைச்சர், செத்தால் நான் அமைச்சராகத் தான் சாவேன்... எனக்கு சீட் கொடுத்தே ஆக வேண்டும் என உடும்புப் பிடியாக இருக்கிறார்’’என்கிறார்கள். 

click me!