எடப்பாடி பழனிசாமி சரியான ஆம்பளையா இருந்தா  தூத்துக்குடிக்குப் போய் மக்களை சந்திக்கட்டும்  !!  தெறிக்க விடும் தினா…

Asianet News Tamil  
Published : Jun 05, 2018, 06:13 AM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
எடப்பாடி பழனிசாமி சரியான ஆம்பளையா இருந்தா  தூத்துக்குடிக்குப் போய் மக்களை சந்திக்கட்டும்  !!  தெறிக்க விடும் தினா…

சுருக்கம்

If Edappadi palanisamy ready to go thoothukudi told ttv dina

அமைதியாக, நியாயமாக தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தின்போது துப்பாக்கி சூடு நடத்திவிட்டு, சமூக விரோதிகள் என பழிபோடும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதுவரை ஏன் அங்கு போய் மக்களை சந்திக்கவில்லை என  அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் சரியான ஆம்பளையாக இருந்தா அந்த மக்களை சந்திக்கட்டும் என தினகரன் கிண்டல் செய்தார்.

உடல் நலம் பாதிக்‍கப்பட்ட நிலையிலும், தேச துரோக வழக்‍கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்‍கப்பட்டுள்ள தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை. டிடிவி தினகரன் எம்.எல்.ஏ. சந்தித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், உடல் நலம் பாதிக்‍கப்பட்டு அவசர சிசிச்சை பிரிவில் இருந்த தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனை தேசதுரோக வழக்‍கில் கைது செய்யப்பட்டிருப்பது கண்டனத்துக்‍குரியது என தெரிவித்தார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு மனசாட்சி உள்ள அனைவருக்கு வேதனை அளிக்கும் என்றும் இபிஎஸ், ஓபிஎஸ் போன்றவர்கள் ஏதாவது ஒரு காரணத்தைக்காட்டி அதில் இருந்து தப்பிக்கவே பார்க்கிறார்கள் என கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதுவரை ஏன் அங்கு போய் மக்களை சந்திக்கவில்லை என  கேள்வி எழுப்பிய  டி.டி.வி.தினகரன் அவர் சரியான ஆம்பளையாக இருந்தா அந்த மக்களை சந்திக்கட்டும் என தினகரன் கிண்டல் செய்தார்.

PREV
click me!

Recommended Stories

'என்னை வெறி ஏத்தி விட்றாத'.. மீண்டும் செய்தியாளரிடம் சீறிய சீமான்! என்ன நடந்தது?
மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த புரட்சிக் கலைஞர்.. கேப்டன் விஜயகாந்துக்கு புகழாரம் சூட்டிய விஜய்!