ஆர்.கே. நகரை ஏன் வளர்ப்பு பிள்ளை என்று சொல்கிறேன் தெரியுமா? - செம பன்ச் கொடுத்த ஸ்டாலின்...!

 
Published : Dec 18, 2017, 05:25 PM ISTUpdated : Sep 19, 2018, 01:42 AM IST
ஆர்.கே. நகரை ஏன் வளர்ப்பு பிள்ளை என்று சொல்கிறேன் தெரியுமா? - செம பன்ச் கொடுத்த ஸ்டாலின்...!

சுருக்கம்

If DMK rule in RKNagar all people will be given metro water connection

ஆர்.கே.நகரில் திமுக ஆட்சி அமைந்தால் அனைத்து மக்களுக்கும் மெட்ரோ வாட்டர் இணைப்பு வழங்கப்படும் எனவும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவது தடுக்கப்படும் எனவும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சென்னை, ஆர்.கே.நகருக்கு வரும் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி, டிடிவி தினகரன் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. தற்போது ஆர்.கே.நகரில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் நடப்பதற்கு இன்னும் சில நாட்களே உள்ள
நிலையில், சூறாவளி பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 

அதிமுக வேட்பாளரான மதுசூதனனுக்கு வாக்கு சேகரிப்பில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், தொண்டர்கள் என வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், திமுக வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து திமுக தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆர்.கே.நகர் தொகுதியில், திமுக, அதிமுக, டிடிவி தினகரன் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில், நேற்றிலிருந்து திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். 

அந்த வகையில், ஆர்.கே நகரில் மருது கணேஷுக்கு ஆதரவாக ஸ்டாலின் 2வது நாளாக பரப்புரை மேற்கொண்டுள்ளார். கொருக்குப்பேட்டை அரிநாராயணபுரத்தில் திமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார். 

அப்போது பேசிய அவர், ஆர்.கே.நகரில் திமுக ஆட்சி அமைந்தால் அனைத்து மக்களுக்கும் மெட்ரோ வாட்டர் இணைப்பு வழங்கப்படும் எனவும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவது தடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். 

மேலும், கொளத்தூர் செல்லப்பிள்ளை என்றும் ஆர்.கே.நகர் தன் வளர்ப்பு பிள்ளை என்று சொல்ல காரணம் ஆர்.கே.நகரை வளர்க்க வேண்டியுள்ளதால் தான் அப்படி கூறுகிறேன் என ஸ்டாலின் தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!