
ஆளுநர் பன்வாரிலால் கலந்து கொண்ட சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய சமூக அறிவியல் மாநாட்டில் தமிழக அமைச்சர்கள் யாரும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.
சேலத்தில் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் இந்தியன் அகாடமி ஆப் சமூக அறிவியல் சார்பில் அறிவியல் மாநாடு இன்று நடைபெற்றது. சேலம் பெரியால் பல்கலைக்கழகத்தில் 41-வது இந்திய சமுக அறிவியல் மாநாடு நடந்தது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு மாநாட்டை துவக்கி வைத்தார்.
இந்தியன் அகாடமி ஆப் சமூக அறிவியல் தலைவர் சர்மா, பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் மணிவண்ணன், தலைமை செயலாளர் சுனில் பலிவால், சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள், மற்றும் கல்லூரி மாணவ - மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
மாநாட்டின் சிறப்பு விருந்தினர் பெயர் பட்டியலில் தமிழக கல்வி துறை அமைச்சர் அன்பழகன் பெயர் இடம் பெற்றிருந்தது. மாநாட்டில் பங்கேற்காமல் அமைச்சர் அன்பழகன் புறக்கணித்தார்.
இந்த அறிவியல் மாநாடு விழாவுக்குப் பிறகு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அரசு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.