நாங்குநேரியில் ஜெயிக்கலேன்னா காங்கிரஸுக்கும் சேர்த்து ஸ்டாலின் தான் தலைவர்: தெனாவெட்டாக பேசும் தி.மு.க.

By Vishnu PriyaFirst Published Sep 28, 2019, 5:09 PM IST
Highlights

வரவர தமிழக அரசியல் செம்ம சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. தலைவர்களே எதிர்பார்க்காத திருப்பங்கள், ட்விஸ்ட்டுகள் நடந்து கொண்டே இருக்கின்றன. அதில் லேட்டஸ்ட், நாங்குநேரி தொகுதியை காங்கிரஸிடமே ஸ்டாலின் கொடுத்ததுதான். இதில் கதர் கோஷ்டி அகமகிழ்ந்து கிடக்க, தி.மு.க. தரப்போ ‘எங்க தலைவர் அவங்களுக்கு டெஸ்ட் வெச்சிருக்கார்.’ என்கிறார்கள். 

வரவர தமிழக அரசியல் செம்ம சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. தலைவர்களே எதிர்பார்க்காத திருப்பங்கள், ட்விஸ்ட்டுகள் நடந்து கொண்டே இருக்கின்றன. அதில் லேட்டஸ்ட், நாங்குநேரி தொகுதியை காங்கிரஸிடமே ஸ்டாலின் கொடுத்ததுதான். இதில் கதர் கோஷ்டி அகமகிழ்ந்து கிடக்க, தி.மு.க. தரப்போ ‘எங்க தலைவர் அவங்களுக்கு டெஸ்ட் வெச்சிருக்கார்.’ என்கிறார்கள். புரியும்படி சொல்லுங்க பாஸ்! என்று கேட்டபோது....


“நாங்குநேரி தொகுதி தங்களுக்குதான் வேணும்னு காங்கிரஸ் தங்களோட அலுவலகத்துல கூட்டமெல்லாம் போட்டு, தமிழக மற்றும் அகில இந்திய நிர்வாகிகளையெல்லாம் அழைச்சு ஓவரா ரகசிய ஆலோசனையெல்லாம் நடத்துச்சு. ஒருவேளை ஸ்டாலின் கொடுக்கலேன்னா என்ன பண்ணலாம்? அப்படிங்கிற அளவுக்கெல்லாம் பேசிக்கிட்டாங்க. ஆனால் எங்க தலைவரோ பெருசா அலட்டிக்காம, சிம்பிளா அந்த தொகுதியை காங்கிரஸுக்கே விட்டுக் கொடுத்துட்டார். இந்த விட்டுக்கொடுத்தலை என்னமோ தங்களோட படைத்திரட்டலுக்கு தி.மு.க. தலைவர் பணிஞ்சா மாதிரி அவங்க நினைச்சு சந்தோஷப்படுறாங்க. 

ஆனா உண்மை அது இல்லை. ஆக்சுவலா இந்த விட்டுக்கொடுத்தல் என்பது காங்கிரஸுக்கு எங்க தலைவர் வெச்சிருக்கிற பரீட்சை அவ்வளவே. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸுக்கு கிடைச்ச வெற்றியானது எங்களால்தான் கிடைச்சிருக்குது. ஆனால் இதை கார்த்தி சிதம்பரம் போன்றவர்கள் ஏத்துக்காக உரசிப் பேசுறாங்க. அதனால் அவங்களோட நிலையை உணர வைப்பதற்காக நாங்குநேரியில் காங்கிரஸை களமிறக்கி விட்டிருக்கிறார். சொல்லப்போனார் காங்கிரஸை அங்கே கைகழுவி விட்டிருக்கிறார் தலைவர்ன்னுதான் சொல்லணும். 

அதிகார மற்றும் பண பலமுடைய அ.தி.மு.க.வுக்கு  எதிராக காங்கிரஸ் போராடிப் பார்க்கட்டும். தி.மு.க.வின் தோள் இல்லேன்னா எவ்வளவு பெரிய சங்கடமுன்னு உணரட்டும். எங்கள் தலைவர் அங்கே பிரச்சாரம் செய்வார்தான். ஆனால் முழு மூச்சை அங்கே கொடுக்கப்போறதில்லை நாங்கள். காங்கிரஸ் கிட்டத்தட்ட தனித்து களமிறங்கின கதிதான். 
காங்கிரஸுக்கு ஆதரவா தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி வாக்குகள் விழும். ஆனால் தேர்தல் பணியில் தோள் கொடுப்பு இருக்காது. 

கஷ்டப்பட்டு காங்கிரஸ் ஜெயித்து வந்தால் தலைவர் ஸ்டாலின் அவங்களுக்கு சலாம் வைத்து, ‘ரியல் ஹீரோ! இன்னும் தமிழ்நாட்டில் உங்களுக்கு செல்வாக்கு இருக்குது!’ன்னு சொல்வார். ஆனால் மோசமான தோல்வியோடு திரும்பினால் அதன் பிறகு தமிழ்நாட்டில் தி.மு.க.வுக்கு மட்டுமில்லை, காங்கிரஸுக்கும் சேர்த்து எங்கள் தலைவர்தான் தலைவரே. எதிர்வரும் உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் நாங்க கொடுக்கிற தொகுதியை, கொடுக்கிற இடங்களை வாங்கிட்டு கம்முன்னு இருக்கணும். மீறி பேசவே கூடாது இந்த தோல்விக்குப் பிறகு. இதுதான் தலைவர் போட்டிருக்கும் பிளான். எப்படி பார்த்தாலும் இதில் எங்களுக்கே நன்மை.” என்கிறார்கள். 

கதை அப்படி போகையில், கதர் கோஷ்டியோ கெக்கே பிக்கேன்னு சிரிச்சுட்டு இருக்குது. 

click me!