நாங்குநேரியில் கழட்டிவிடப்பட்ட குமரி அனந்தன்! சுயேட்சையாக போட்டியிட முடிவு?

By Selva KathirFirst Published Sep 28, 2019, 4:52 PM IST
Highlights

நாங்குநேரி தொகுதியில் போட்டியிட வேட்பு மனுவை வேறு வாங்கிச் சென்றார் குமரி அனந்தன். இந்த நிலையில் நேற்று இரவு நாங்குநேரிக்கான காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். அதில் குமரி அனந்தனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
 

நாங்குநேரி தொகுதி தனக்கு தான் என்று கூறி வந்த குமரி அனந்தனுக்கு காங்கிரஸ் மேலிடம் நெல்லை அல்வா லம்பாக கொடுத்துள்ளது.

தனது சகோதரர் வசந்தகுமார் எம்பி., எம்எல்ஏ என காங்கிரசில் கொடி கட்டிப் பறந்து வரும் நிலையில் மகளும் ஆளுநர் ஆகிவிட்ட நிலையில் தானும் எம்எல்ஏ ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு களம் இறங்கினார் குமரி அனந்தன். தள்ளாத வயதிலும் சத்தியமூர்த்தி பவன் வந்து விருப்ப மனுவை வாங்கியதடுன் நாங்குநேரியில் தான் போட்டியிட்டால் வெற்றி உறுதி என்று பேட்டி வேறு கொடுத்துச் சென்றார்.

அதோடு மட்டும் அல்லாமல் நேற்று தனது உதவியாளர் மூலமாக நாங்குநேரி தொகுதியில் போட்டியிட வேட்பு மனுவை வேறு வாங்கிச் சென்றார் குமரி அனந்தன். இந்த நிலையில் நேற்று இரவு நாங்குநேரிக்கான காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். அதில் குமரி அனந்தனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

தள்ளாத வயது, செலவழிக்க பசை இல்லாத பார்ட்டி போன்ற காரணங்களால் குமரி அனந்தன் ஓரம்கட்டப்பட்டார். ஆனால் இதனை முதலிலேயே எதிர்பார்த்து தான் வேட்பு மனுவை வாங்கி வைக்கச் சொல்லியுள்ளார் குமரி அனந்தன். இந்த நிலையில் வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் இல்லாத காரணத்தினால் எரிச்சல் அடைந்த குமரி அனந்தன் சுயேட்சையாக போட்டியிடும் விபரீத முடிவை எடுத்துள்ளதாக சொல்கிறார்கள்.

இதற்காக விரைவில் அவர் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளாராம். ஆனால் இதனை கேட்டு அவரது ஆதரவாளர்களே தலை தெறிக்க ஓடுவதாக தகவல். அதே சமயம் சீனியர் லீடர் என்பதால் அவரை சமாதானப்படுத்த கே.எஸ்.அழகிரி முயற்சி செய்து வருவதாக பேசிக் கொள்கிறார்கள்.

click me!