தடுமாறும் தலைநகர்.. ஆக்ஸிஜன் சப்ளையை தடுத்தால் தூக்கில் போடுவோம்.. எரிமலையாய் வெடித்த நீதிபதிகள்..!

By vinoth kumarFirst Published Apr 24, 2021, 4:07 PM IST
Highlights

கொரோனா நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன் விநியோகத்திற்குத் தடையாக இருப்பது யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

கொரோனா நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன் விநியோகத்திற்குத் தடையாக இருப்பது யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமடைந்து, நாள்தோறும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு காப்பாற்ற முடியாமல் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக டெல்லிில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளனர். ஆக்ஸிஜன் சப்ளையை சீரமைத்து, முறையாக வழங்கக் கோரி ஏற்கெனவே டெல்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தினர். பிச்சை எடுங்கள், திருடுங்கள், கடன் வாங்கியாவது மக்களுக்கு ஆக்ஸிஜனை கொண்டு வந்து கொடுங்கள் என்று மத்திய அரசை விளாசினர்.

இந்நிலையில், டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பாக பல்வேறு தனியார் மருத்துவமனைகள் தொடர்ந்த வழக்குகளை டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவமனை தரப்பில் மனுதாரர் மருத்துவமனையில் 306 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். எங்கள் மருத்துமனையில் நேற்று இரவே ஆக்ஸிஜன் தீர்ந்துவிட்டது. டெல்லி அரசின் உதவியால் ஆக்ஸிஜன் பெற்றுள்ளோம், அதுவும் இன்று பிற்பகலில் தீர்ந்துவிடும். அதன்பின் கொரோனா நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்ய வேண்டிய நிலையில்தான் இருக்கிறோம். டிஸ்சார்ஜ் செய்யத் தொடங்கிவிட்டோம் எனத் தெரிவித்தார்.

டெல்லி அரசு தரப்பில் 480 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. ஆனால், 297 மெட்ரிக் டன் மட்டுமே கிடைத்துள்ளது. இதே நிலை நீடித்தால் மிகப்பெரிய பேரழிவுகள் ஏற்படும் எனத் தெரிவித்தார். அப்போது, ஆவேசமடைந்த நீதிபதிகள் ஆக்சிஜன் வழங்க தடையாக இருப்பவரை யார் என்று சொல்லுங்கள் அவரை தூக்கில் போடுவோம் என்றனர். யாரையும் தப்பிக்க விட மாட்டோம். மேலும் தடையாக இருக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளோம் என்றார். 

click me!