அனைத்து பதவிகளும் ரத்து என்றால் பொதுக்குழு உறுப்பினர்களின் பதவிகளும் ரத்து தானே?- வைத்தியலிங்கம் கேள்வி

By Ajmal KhanFirst Published Jun 24, 2022, 4:23 PM IST
Highlights

அதிமுக பொதுக்குழுவில் அனைத்து பதவிகளும் ரத்து செய்யப்பட்டதாக கூறியதால், தற்போது அதிமுகவிற்கு பொருளாளர் என்ற அடிப்படையில் ஓ.பன்னீர் செல்வம் தான் தலைவர் என முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

பொதுக்குழு கூட்டம் அதிகாரம் இல்லை

அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நடைபெற்ற பொதுக்குழுவில் ஓபிஎஸ் ஒப்புதல் வழங்கிய 23 தீர்மானங்களும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஒப்புதல் இல்லாமல் அவைத்தலைவர் தேர்ந்தெடுக்கவும் பட்டார். தொடர்ந்து ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த ஓபிஎஸ் கூட்டத்தில் இருந்து வெளியேறினார். அப்போது இந்த பொதுக்குழு கூட்டம் சட்டப்படி நடைபெறவில்லையென கூட்டத்தில் வைத்தியலிங்கம் முழக்கமிட்டார். இதனையடுத்து ஒருங்கிணைப்பாளர் ஓப்புதல் இல்லாமல் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட முடியாது என ஓபிஎஸ் தரப்பினர் தெரிவித்தனர். 

ஓபிஎஸ் பதவி ரத்து

இதற்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், 5ல் ஒருங்பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு இருந்தாலே பொதுக்கழு கூட்டத்தை கூட்டத்தை கூட்டலாம் என தெரிவித்தார். ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான சட்ட திருத்தத்தை நேற்று பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறாததால், அந்த பதவி தானாகவே காலாவதி ஆகிவிட்டதாக குறிப்பிட்டார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் நேற்றோடு காலாவதி ஆகிவிட்டது என்றும் தெரிவித்தார்.ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவின் பொருளாளர், எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தலைமை நிலையச் செயலாளர் என்றே தெரிவித்தார். இந்த நிலையில் இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சரும்,ஓபிஎஸ் ஆதரவாளருமான வைத்தியலிங்கம், நீதிமன்றம் 23 தீர்மானங்களை தவிர வேறு எதுவும் கொண்டு வரக்கூடாது எனக்கூறியது. தீர்மானங்கள் கொண்டுவரப்படுவது குறித்து விவாதிக்கலாம் ஆனால் தீர்மானம் கொண்டுவரக்கூடாது என தெரிவிக்கப்பட்டது. இருபத்திமூன்று தீர்மானங்களும் ரத்து செய்து உள்ளதாக பொதுக்குழுவில் தெரிவித்தனர். அப்படியென்றால் தானாகவே பொதுக்குழு உறுப்பினர்கள் பதவியும் ரத்து ஆகிவிடும் என கூறினார். ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என அனைத்தும் ரத்தாகிறது, அப்படி உள்ள நிலையில் எப்படி அவைத்தலைவரை தேர்ந்தெடுக்க முடியும் என கேட்டார். 

திமுக சந்தோஷப்பட வேண்டாம்! உதயநிதிக்கு பட்டாபிஷேகம் நடக்கும் போது நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்- சிவி.சண்முகம்

பொதுக்குழு உறுப்பினர்கள் பதிவியும் ரத்து..?

பொதுச்செயலாளர் இல்லையென்றால், ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைப்பாளர் இல்லையென்றால் அவைத்தலைவர், தற்போது அவைதலைவரும் இல்லை எனவே எடப்பாடி பழனிச்சாமி தரப்பின் கூற்றுப்படியே  அதிமுகவிற்கு தலைமை பொறுப்பு பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம் தான் என கூறினார். எனவே ஓபிஎஸ் தான் தலைவர் என அவர்களே கூறிவிட்டனர் என தெரிவித்தார். தேர்தல் ஆணையத்திற்கு நாங்கள் செல்லவே இல்லை சென்றதாக  தவறாக கூறுகின்றனர், ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர், மாவட்ட செயலாளர்கள்,  ஒன்றிய செயலாளர் அனைத்து பதவிகள் ரத்து என கூறிவிட்டனர் அதன்பிறகு பொதுக்குழு கூட்டம் தொடர்பாக கொண்டு வந்த தீர்மானம் எப்படி செல்லுபடியாகும் என கேள்வி எழுப்பினார். 

இதையும் படியுங்கள்

ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் பதவி நேற்றோடு காலி..! இனி அவருக்கு இந்த பதவி தான்...!சிவி.சண்முகம் அதிரடி

click me!