மாவட்டத்துக்கு 10 கோடி..?? இதுதான் எடப்பாடியின் ஆளுமையா.? அயோக்கியத்தனம் ... டாரா கிழித்த நாஞ்சில் சம்பத்.

By Ezhilarasan BabuFirst Published Jun 24, 2022, 3:53 PM IST
Highlights

தனக்கான ஆதரவாளர்களை எடப்பாடி பழனிச்சாமி விலை கொடுத்து வாங்கி இருக்கிறார் என  நாஞ்சில் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார்ந மாவட்டத்திற்கு 10 கோடி என பேசி 5 கோடி வரை செட்டில் செய்துள்ளதாகவும் அவர் பரபரப்பு குற்றஞ்சாட்டியுள்ளார். 
 

தனக்கான ஆதரவாளர்களை எடப்பாடி பழனிச்சாமி விலை கொடுத்து வாங்கி இருக்கிறார் என  நாஞ்சில் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார்ந மாவட்டத்திற்கு 10 கோடி என பேசி 5 கோடி வரை செட்டில் செய்துள்ளதாகவும் அவர் பரபரப்பு குற்றஞ்சாட்டியுள்ளார். 

அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கை தீவிரமடைந்துள்ளது. நடந்து முடிந்த பொதுக்குழு கூட்டத்தில் எப்படியாவது எடப்பாடி பழனிச்சாமியை ஒற்றை தலைமையாக நியமித்துவிட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் தீவிரம் காட்டினார். ஆனால் எந்த புதிய தீர்மானங்களையும் நிறைவேற்றக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டதால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினரின் திட்டம் பலிக்காமல் போனது. தனக்கு சாதகமான தீர்ப்புடன் பொதுக்குழுவில் கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். ஒற்றை தலைமையாக எடப்பாடியை நியமிக்க முடியாவில்லையே என்ற வெறுப்பில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஓ .பன்னீர்செல்வத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டனர்.

மேலும் ஜூலை 11ஆம் தேதி  அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அவசர அவசரமாக அறிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் , ஜேசிடி பிரபாகரன் போன்றோர் வெளிநடப்பு செய்தனர்.

இதையும் படியுங்கள்: வாயில் வடை சுட்டது போதும்... இப்ப காட்டுங்க உங்க சமூகநீதியை... ஸ்டாலினை வாண்டடா வம்பிழுக்கும் V.P துரைசாமி.

இதனால் பரபரப்பாக கூடிய சில நிமிடங்களிலேயே பொதுக்குழு  கலைந்தது. இதை பலரும் பல வழிகளில் விமர்சித்து வருகின்றனர். ஓபிஎஸ் இல்லத்தில் ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளரை சந்தித்த துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் நடந்தது பொதுக்குழுவை அல்ல ஒரு சில நிமிடங்களில் முடிந்து போன ஓரங்க நாடகம்,  பதவி வெறி எடப்பாடி பழனிச்சாமி என் கண்ணை மறைத்து விட்டது, பொதுக்கூட்ட மேடைக்கு கீழே இருந்தவர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் அல்ல காட்டுமிராண்டிகள் கூட்டம்.

ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு என அறிவித்திருப்பது செல்லாது,  ஒருங்கிணைப்பாளர் கையொப்பம் இல்லாமல் பொதுக்குழு நடத்த முடியாது, என்றார். மொத்தத்தில் அதிமுகவில் நடந்துவரும் இந்த அதிகார மோதல் அரசியல் களத்தை பரபரப்பாகியுள்ளது. பலரும் பலவழிகளில் அதிமுக விமர்சித்து வருகின்றனர். அந்த வரிசையில் திராவிட  இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் எடப்பாடி பழனிச்சாமி ஒரு துரோகத்தின் அடையாளம், எந்த ஆளுமையும் அற்ற அவர் பணத்தைக் கொடுத்து பதவிகளை வாங்க முடிவு செய்துவிட்டார் என விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியின் விவரம் பின்வருமாறு:-

ராணுவக் கட்டுப்பாடு உள்ள கட்சி அண்ணா திமுக என்ற நிலை மாறி காட்டுமிராண்டிக் கூட்டம் என்ற பெயரை எடுத்துள்ளது. கொஞ்சம் கூட குற்ற மனப்பான்மை இல்லாமல் சரியோ தவறோ சட்டப்படி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்தான் ஆனால் அவர் வரும்போது அவரை கேலி பேசி கிண்டல் செய்து எள்ளி நகையாடி உள்ளனர் இது மிகவும் தவறு,  அவரே அச்ச உணர்வுடன் அந்தக் கூட்டத்தில் அமர்ந்திருந்தார். அவரது வாகனத்தை அப்புறப்படுத்த சொல்லி  அநாகரிகமாக நடந்து கொண்டார்கள், ஒரு கட்சியினுடைய தலைமை ஒருங்கிணைப்பாளர் பொதுக் குழுவிற்கு வரும்போது அவரை இன்முகத்துடன் அழைத்து, வரவேற்று, உபசரித்து இன்முகம் காட்டாமல் அவரை அவமரியாதை செய்ததன் மூலம் அதிமுக இன்று அழுக்காகி விட்டது.

இதையும் படியுங்கள்:  ஆரம்பமே சக்சஸ்...திரௌபதி முர்முவுக்கு தொலைபேசியில் வாழ்த்துச் சொன்ன சோனியா.. மம்தா

ஆனால் எடப்பாடி பழனிசாமி என்ற  இடைச்செருகல் வருகிறபோது வழிநெடுக வரவேற்பு கொடுத்து நடனமாடி அவரை பொதுக்குழு மேடையில் கொண்டுவந்து நிறுத்தியதன் மூலம் இது ஒரு திட்டமிட்ட நாடகம் எனபது தெரிகிறது. ஓ.பன்னீர் செல்வத்தை அவமதிக்க வேண்டும் என்பதே அவர்களது திட்டம், அதை நிறைவேற்றி விட்டார்கள். ஆனால் ஜெயலலிதாவால் இரண்டு முறை முதலமைச்சராக்கப்பட்டவர். வழக்கு முடித்து அவர் வந்த பிறகு மீண்டும் முதலமைச்சர் பதவியை அவரிடம் ஒப்படைத்தவர் ஓ.பன்னீர்செல்வம். அவருக்கு இப்படி ஒரு நெருக்கடியான நிலை வந்திருப்பதை எப்படி கவலை கொள்கிறேன். பொதுக்குழு மேடையில் கூட எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வத்தை அண்ணன் எனக் கூறினார். ஆனால் அவர் ஒரு அண்ணனைப் போல நடத்தவில்லையே.

மாறாக தன்னுடைய அடியாட்களை ஏவி விட்டு ஓபிஎஸ்சை அவமரியாதை செய்து விட்டார். ஆயிரம் தான் இருந்தாலும் ஓபிஎஸ்சின் கட்டளைக்காக ஒரு காலத்தில் காத்திருந்தவர் தான் எடப்பாடி பழனிசாமி, கூவத்தூர் கூத்தில் மிதந்தவர்தானே எடப்பாடி பனிச்சாமி, இவர் என்ன மெரிட்டில் வந்தவரா?அதிமுகவிற்கு தலைமை தாங்குவதற்காக ஏதாவது ஒரு அடிப்படைத் தகுதி எடப்பாடிபழனிசாமியிடம் உள்ளதா? ஓபிஎஸ்சை அவமதித்து ஒரு இமாலயத் தவறை எடப்பாடி பழனிச்சாமி செய்திருக்கிறார். பன்னீர் செல்வத்திற்கு வந்த நிலைமை நாளைக்கு எடப்பாடி பழனிச்சாமிக்கும் வரும்.  வருகிற அவர்கள் கையெழுத்து போடுவதற்காக  வைக்கப்பட்டிருந்த வருகைப்பதிவேடு புத்தகத்தையே எடுத்து சென்று விட்டார்கள் இதற்கு பெயர் பொதுக்குழுவா.

எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையை ஏற்றுக்கொண்டிருக்கிற புழுக்களின் குழு. பொதுக் குழு கூட்டுவதற்கு முன்பாகவே மாவட்டத்திற்கு 10 கோடி என பேரம் பேசி 5 கோடி ரூபாய் எடப்பாடி பழனிச்சாமி தரப்பால் கொடுக்கப்பட்டுள்ளது. ஆதாரத்துடன் சொல்கிறேன், அதிமுக காரர்களே என்னை தொலைபேசியில் அழைத்து இதைச் சொல்ல செல்கிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

click me!