பொய் சொல்கிறார் பொன்.மாணிக்கவேல் !! மன உளைச்சலில் குடும்பத்தினர் !! புலம்பும் அமைச்சர்கள் !!

Published : Jul 25, 2019, 08:29 PM IST
பொய் சொல்கிறார் பொன்.மாணிக்கவேல் !! மன உளைச்சலில் குடும்பத்தினர் !! புலம்பும் அமைச்சர்கள் !!

சுருக்கம்

சிலை கடத்தலில் நாங்கள் ஈடுபட்டதாக வெளியான தகவல் பொய்யானது என்று அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் கூட்டாக பேட்டியளித்துள்ளனர்.

சிலை கடத்தல் வழக்கில் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பொன் மாணிக்கவேல், சிலை கடத்தல் வழக்கில் 2 அமைச்சர்களுக்கு தொடர்புள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றம் சாட்டி இருந்தார்.

இது தொடர்பான ஆதாரங்களுடன் ஆகஸ்ட் 6 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு பொன் மாணிக்கவேலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கி இருந்தது. சிலை கடத்தலில் 2 அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாக பொன்.மாணிக்கவேல் கூறினாலும் அது யார் என்று அவர் கூறிவில்லை.

இந்நிலையில் இது தொடர்பாக ஆம்பூரில் பேட்டியளித்த அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் , சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர், பொன் மாணிக்கவேல் நீதிமன்றத்தில் யார் பெயரையும் குறிப்பிடாத நிலையில் எங்களுக்கு எதிராக திட்டமிட்டு பொய் செய்தியை தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது என தெரிவித்தனர்.

அந்த 2 அமைச்சர்கள் நாங்கள் என்பது முற்றிலும் பொய்யானது. செய்தியை வெளியிட்ட அந் நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்  என தெரிவித்த அமைச்சர்கள் இந்த குற்றச்சாட்டால் தங்களது குடும்பத்தினர் மன உளைச்சலில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

Udhayanidhi: உதயநிதியை பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? விமர்சித்த தலைவர்களை கண்டித்த ஸ்டாலின்!
DMK vs TVK: முதல்வர் விஜய்க்கு தண்ணி காட்டிய உதயநிதி.. ஒத்த வார்த்தையால் மாறிய அரசியல் ட்ரெண்ட்!