
"அதிமுகவின் சீரழிவுக்கு ஆடிட்டர் குருமூர்த்தி தான் காரணம். அதிமுக உள்விவகாரங்களில் தலையீட்டால் தமிழக அமைச்சர்களுடன் ஆடிட்டர் குருமூர்த்தி பேசிய வீடியோக்களை வெளியிடுவோம்" என ஆடிட்டர் குருமூர்த்தியின் கருத்துக்கு அதிமுக IT wing பதிலடி கொடுத்துள்ளது.
"காலம் கடந்து தினகரன் ஆதரவாளர்களை நீக்குவதால், எடப்பாடி - ஓபிஎஸ் கையாலாகாதவர்கள் (Impotent)" என்று ஆர்எஸ்எஸ் பிரமுகரும், பாஜக பினாமி எடப்பாடி அரசின் எஜமானர் என்று கருதப்படுபவரும், சுப்பிரமணிய சுவாமியால் 'மைலாப்பூர் லாபி' என அழைக்கப்பட்டவருமான துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள அதிமுக IT Wing தலைவர், ஆடிட்டர் குருமூர்த்தியை முட்டாள் (Idiot) என்று சொல்லி "அதிமுகவின் இந்த நிலைக்கு ஆடிட்டர் குருமூர்த்தி தான் காரணம்" என்றும், அதிமுக உள்விவகாரங்களில் தலையீட்டால் அதிமுக அமைச்சர்களுடன் ஆடிட்டர் குருமூர்த்தி பேசிய வீடியோக்களை வெளியிடுவோம்" என்றும் மிரட்டியுள்ளார்.
இந்திய அரசின் அதிகாரம் மிக்க இடத்தில் இருப்பவராகவும், தமிழக அரசை பின்னாலிருந்து நடத்தும் எஜமானராகவும் கருதப்படும் ஆடிட்டர் குருமூர்த்தியை - அதிமுக IT WING - ஐ சேர்ந்த ஒருவர் எதிர்ப்பது அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.