
அரசியல் என்ட்ரி இருக்குமா ? இருக்காதா ? மீண்டும் சஸ்பென்ஸ் வைத்த ரஜினிகாந்த் !!
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா என ரசிகர்கள் குழம்பிப் போயுள்ள நிலையில் இன்று அவர் தனது ரசிகர்களை மேலும் குழப்பியுள்ளார். வரும் 31 ஆம் தேதி தன்னுடைய அரசியல் நிலைப்பாடு குறித்து வரும் அறிவிக்கப்போவதாகவும், அன்றுதான் அரசியலுக்கும் வருதா ? இல்லையா ? என்பது தெரியவரும்.
நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை இரண்டாவது கட்டமாக இன்று முதல் சந்திக்கிறார். ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நோக்கில் நடைபெறும் இந்தச் சந்திப்பு, வரும் 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் ரஜினிகாந்த் ரசிகர்களிடைபே பேசினார். அப்போது அரசியல் விஷயமாக என்ன சொல்லபோறேன் என்பதை குறித்து தெரிந்து கொள்ள மக்களுக்கு ஆர்வம் உள்ளதோ இல்லையோ ஊடகங்களுக்கு அதிக ஆர்வம் உள்ளது என கூறினார்.
போர் வரும்போது பார்க்கலாம் என கூறியிருந்தேன். போர் என்றால் தேர்தலா? என கேள்வி எழுப்பிய அவர், அரசியல் எனக்கு புதிது அல்ல. 1996 முதல் அரசியலில் உள்ளேன். அதில் உள்ள கஷ்ட நஷ்டங்கள், ஆழம் அனைத்தும் தெரிந்ததால்தான் தயங்குகிறேன் என தெரிவித்தார்.
போருக்கு சென்றால் ஜெயிக்கனும். போரில் வெற்றி பெற பலம் மட்டும் போதாது. வியூகம் முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தனது அரசியல் நிலைப்பாடு குறித்து வரும் 31ல் அறிவிக்க உள்ளேன்என்று அவர் கூறியபோது ரசிகர்கள் அனைவரும் உற்சாகமாக கைகளை தட்டி வரவேற்றனர். தொடர்ந்து பேசிய அவர், நான் 31 ஆம் தேதியன்று நான் அரசியலுக்கு வந்துவிடுவேன் என்று சொல்லப்போவதில்லை…... அன்று என்ன முடிவு எடுக்க போகிறேன் என்பதைதான் தெரிவிக்கவுள்ளேன். என சொல்லி ரசிகர்களுக்கு மீண்டும் சஸ்பென்ஸ் வைத்தார்.