
முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவரது இலாகாக்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தான் தான் காரணம் என்று சுப்ரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
தமிழக அரசியலில் எதையாவது பேசி பிரச்சனையை கிளப்புவது சுப்ரமணியம் சுவாமியின் வழக்கம். இவரது பேட்டிகளால் தேவையற்ற சர்ச்சைகள் கிளம்பியுள்ளது. சமீபத்தில் காவிரி பிரச்சனையில் தமிழக விவசாயிகளை கிண்டல் செய்து பல இடங்களில் பேட்டி அளித்த அவர் காவிரி நீருக்காக ஏன் சண்டையிடுகிறீர்கள் கடல் நீரை உப்பை நீக்கி நல்ல நீராக மாற்றி விவசாயத்துக்கு பயன் படுத்தலாமே என்று பேட்டியளித்தார்.
வேண்டுமானால் அந்த டெக்னாலஜி பற்றி என்னிடம் கேட்க சொல்லுங்கள் . இஸ்ரேலில்லிருந்து அந்த டெக்னாலஜியை சொல்கிறேன் என்று கூறி பரபரப்பு ஏற்படுத்தியவர். இந்நிலையில் முதல்வர் உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சுப்ரமணியம் சுவாமி தொடர்ந்து பிரச்சனையை கிளப்பி வருகிறார்.
முதலமைச்சர் செயல்படாததால் கவர்னர் ஆட்சியை கொண்டுவரவேண்டும், சட்டம் ஒழுங்கு கெட்டுபோச்சு ஆட்சியை கலைக்கவேண்டும் என்றெல்லாம் அறிக்கை விட்டார். இதை தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் எதிர்த்தனர். பாஜகவுக்குள்ளும் எதிர்ப்பு கிளம்பியது.
இதனிடையே ராகுல்காந்தி சென்னை வந்து அப்போலோவில் நலம் விசாரித்து சென்றது பாஜகவிற்கு ஆத்திரத்தை கிளப்ப கவர்னர் அமைச்சர்களை அழைத்து பேசினார். இதுவும் சர்ச்சையை கிளப்பியது. மத்திய அரசு மாநில அதிமுக அரசுக்கு நெருக்கடியை கொடுப்பதாகவும் தமிழகத்தின் முக்கிய எதிர்கட்சியான திமுக தலைமை தவிர அனைத்து எதிர்கட்சித்தலைவர்களும் கண்டித்தனர்.
இதன் விளைவு மத்திய அரசு இறங்கி வந்தது. ஓபிஎஸ் வசம் இலாகாக்களை ஒப்படைக்க ஒத்துகொண்டது. நேற்று ஓபிஎஸ் வசம் இலாகாக்கள் மாற்றப்பட்ட அறிவிப்பு வந்தவுடன் அனைத்து கட்சி த்தலைவர்களும் வரவேற்றனர்.
இந்நிலையில் இது பற்றி கருத்து தெரிவித்துள்ள சுப்ரமணியம் சுவாமி என்னால் தான் ஓபிஎஸ்க்கு பதவி கிடைத்துள்ளது. என்று தனது டுவிட்டரில் கூறியுள்ளார். என்ன ஆனாலும் இவர் அடங்க மாட்டாரா? என அதிமுக தொண்டர்கள் கூறியுள்ளனர்.