
முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து கேட்டறியவும், அவரை பார்க்கவும் இந்தியா முழுவதிலுமிருந்தும் தலைவர்கள் படையெடுத்து வருகின்றனர்.
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி ஜெயலலிதாவை வந்து பார்த்து சென்றது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
பிரதமர் நரேந்திர மோடி ஜெயலலிதாவை நேரில் வந்து பார்ப்பார் என தகவல் பரவி வந்தது.
இந்தநிலையில் ஜெயலலிதாவின் நண்பரும், மத்திய நிதி அமைச்சருமான அருண்ஜெட்லி ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று சென்னை வந்தடைந்தார். அருண் ஜெட்லியுடன் பாஜகவின் தலைவர் அமித்ஷாவும் வந்துள்ளார்.
அவர்களை சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் பதிதாக தேர்ந்தெடுக்கப்பட்;டுள்ள எம்.பி.இல.கணேசன், மத்திய அமைச்சர் பொன்.ராதா ஆகியோர் வரவேற்றனர்.
இன்னும் சற்று நேரத்தில் அப்பல்லோ சென்று ஜெயலலிதாவை சந்திக்க உள்ளனர்.