வாய்ப்பு கிடைத்தால் டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்படுவேன்... ஓ.பன்னீர்செல்வம் அதிரடி!!

Published : Mar 17, 2023, 12:24 AM IST
வாய்ப்பு கிடைத்தால் டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்படுவேன்... ஓ.பன்னீர்செல்வம் அதிரடி!!

சுருக்கம்

வாய்ப்பு கிடைத்தால் டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்படுவேன் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளது அதிமுகவில் நிலவும் பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது. 

வாய்ப்பு கிடைத்தால் டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்படுவேன் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளது அதிமுகவில் நிலவும் பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது. மதுரையில் விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வாய்ப்பு அமைந்தால் டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்படுவேன். விரைவில் சசிகலாவை சந்திப்பேன். கட்சி விதிகளுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார்.

இதையும் படிங்க: நான் பேசுவதற்கு பல விசயங்கள் உள்ளன; ஆனால் பேசக்கூடிய மனநிலையில் இல்லை - திருச்சி சிவா வேதனை

எடப்பாடி பழனிசாமி தரப்பு நடவடிக்கைகள் தொடக்கம் முதல் இன்றுவரை சட்டநீதிகளுக்கு புறம்பாகவே நடந்துகொண்டிருக்கிறது. இது அனைவருக்கும் தெரியும். நாங்கள் மக்கள் தீர்ப்பை எதிர்நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஈரோடு இடைத்தேர்தல் உட்பட தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்தக்கட்ட நகர்வு அரசியல் அரங்கில் கவனம் பெற்றுள்ளது.  

இதையும் படிங்க: திருச்சி காவல்நிலையத்திற்குள் மோதல் விவகாரம்... முதல்வர் கையறு நிலையில் இருக்கிறார்... ஈபிஎஸ் விமர்சனம்!!

அதிமுகவில் ஏற்கனவே பரபரப்பு நிலவி வருகிறது. ஒற்றை தலைமை விவகாரத்தில் தொடங்கி, பொதுக்குழு செல்லும், உச்சநீதிமன்றம் தீர்ப்பு, இரட்டை இலை சின்னம், ஈரோடு இடைத்தேர்தலில் டெபாசிட்டை தக்க வைத்தது என நடப்பது அனைத்தும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக நடைபெற்று வரும் நிலையில் டிடிவி தினகரன் மற்றும் சசிகலா உடன் இணைந்து செயல்படுவது குறித்து ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளது அதிமுகவில் நிலவும் பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!