எம்மேல கைபட்டா கத்தி எடுத்து குத்திக்கிட்டு செத்துடுவேன்... போலீஸை மிரட்டிய மீராமிதுன் வீடியோ..!

Published : Aug 14, 2021, 03:33 PM IST
எம்மேல கைபட்டா கத்தி எடுத்து குத்திக்கிட்டு செத்துடுவேன்... போலீஸை மிரட்டிய மீராமிதுன் வீடியோ..!

சுருக்கம்

கத்தி எடுத்து என்னை குத்தி விட்டு என்னை வெளியே கூட்டிப்போங்க. நான் குத்திக்கிட்டு இங்கேயே செத்துடுவேன்.

பட்டியல் வகுப்பினர் குறித்து அவதூறாக வீடியோ பதிவு வெளியிட்ட வழக்கில் நடிகை மீரா மிதுன் கைது செய்யப்பட்டுள்ளார். 

கேரளாவில் அவர் கைது செய்யபடுவதற்கு முன் வீடியோ வெளியிட்டு கதறி அழுதுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ‘’இவனுங்க எல்லோரும் என்னை டார்ச்சர் பன்றாங்க. முதலமைச்சர் அவர்களே ஒரு பொண்ணுக்கு இப்படித்தான் நடக்கணுமா? ஒரு பொண்ணுக்கு நிஜமாலுமே இப்படித்தான் நடக்கணுமா..? எல்லோரையுமே போகச்சொல்லுங்க. போலீஸ்னா அட்ராசிட்டி பண்ணுவீங்களா? கத்தி எடுத்து என்னை குத்தி விட்டு என்னை வெளியே கூட்டிப்போங்க. நான் குத்திக்கிட்டு இங்கேயே செத்துடுவேன். என் மேல இவங்களோட ஒரு கை பட்டாலும் கத்தி எடுத்துக் குத்திக்கிட்டு இங்கேயே செத்துடுவேன்.  முதலமைச்சர் அவர்களே பிரதமர் மோடி அவர்களே தமிழ்நாடு போலீஸ் என்னை ரொம்ப டார்ச்சர் பண்றாங்க’’ என அவர் வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

சென்னை மத்தியக் குற்றப்பிரிவு சைபர் பிரிவு போலீஸார் மீரா மிதுன் மீது IPC சட்டப்பிரிவுகள் 153 ( இரு பிரிவுகள் இடையே கலவரத்தைத் தூண்டுதல்) 153(எ)1 (பேட்டி, பேச்சு, எழுத்து மூலம் இரு சமூகங்கள் இடையே மோதலைத் தூண்டுதல்) 505(1) (பி) (குறிப்பிட்ட சமூகத்திற்கு, அரசுக்கு எதிராக குற்றம் செய்ய தூண்டுவது) 505(2) (மக்களின் நம்பிக்கை, வழிபாட்டுக்கு எதிராகப் பேசுவது, நடப்பது),வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.   

PREV
click me!

Recommended Stories

Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!