ஜி.கே.மணி இருக்கும்வரை நான் இணைய மாட்டேன்..! அடித்துச் சொல்லும் அன்புமணி..!

Published : Dec 03, 2025, 08:47 AM IST
GK Mani lashes out Anbumani

சுருக்கம்

ராமதாஸ் ஐயாவை அதாவது மருத்துவர் ஐயாவிடமிருந்து என்னை பிரித்து, இன்று ஐயாவை சுற்றி இருக்கின்ற துரோகிகள், தீய சக்திகள், திமுகவின் கைக்கூலிகள் இருக்கின்ற வரை நான் அங்கே சேரமாட்டேன்.

பாமக தமிழ்நாட்டின் வன்னியர் சமூகத்தின் முக்கிய அரசியல் அமைப்பாக இருந்தாலும், சமீபகாலமாக கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இடையே உருவான குடும்ப மோதல் கட்சியை பிளவுபடுத்தியுள்ளது. இந்த மோதலில் ஜி.கே. மணி ராமதாஸ் அணியின் முக்கியமானவராக இருக்கிறார்.

அன்புமணி ராமதாஸின் தலைமை கட்சியின் சின்னம், கொடி, தலைமை உரிமைகளைப் பறிக்க முயற்சிக்கிறது என ராமதாஸ் தரப்பு யை மோசடி என்று குற்றம் சாட்டி வருகிறது. இது கட்சியின் 2026 சட்டமன்றத் தேர்தல் முன்னதாக பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ராமதாஸ் தன்னை கட்சி தலைவராக அறிவித்தார். இதை ஜி.கே. மணி உறுதிப்படுத்தினார். இதன்பின் கட்சியில் இரு அணிகளும் தனித்தனி கூட்டங்கள் நடத்தின. பாமகவில் பிரிவினை ஏற்படுத்தியதாகவும், தன்னிச்சையாக பாமகவை நடத்தியதாகவும் ஜி.கே. மணி அறிக்கையை வெளியிட்டு, அன்புமணியை கட்சியை அழிக்கும் சக்தி என்று விமர்சித்தார்.

இந்நிலையில், தர்மபுரியில் பேசிய அன்புமணி. ‘‘ராமதாஸ் ஐயாவை அதாவது மருத்துவர் ஐயாவிடமிருந்து என்னை பிரித்து, இன்று ஐயாவை சுற்றி இருக்கின்ற துரோகிகள், தீய சக்திகள், திமுகவின் கைக்கூலிகள் இருக்கின்ற வரை நான் அங்கே சேரமாட்டேன். நான் அங்கே இணைய மாட்டேன். ஐயா ஒரு சமூக சீர்திருத்தவாதி. 45 ஆண்டுகாலம் இந்த மக்களுக்காக, தமிழ் சமூகத்திற்காக, தமிழ்நாட்டுக்காக உழைத்துக் கொண்டிருப்பவர்.

ஆனால், ஐயாவை இன்று திசை திருப்பி, ஐயா மனதை மாற்றி நான் சேரமாட்டேன், இணைய மாட்டேன் என்று உங்களுக்கு நான் இன்று தெரியப்படுத்துகின்றேன். எவ்வளவு வலியோடு, இதை நான் பேசுகின்றேன். எவ்வளவு மன அழுத்தம், மன உளைச்சல் இந்த மாவட்டம் அப்படிப்பட்ட மாவட்டம், தர்மபுரியில் உள்ள சொந்தங்கள் அப்படிப்பட்ட சொந்தங்கள். பாட்டாளி மக்கள் கட்சி உடைய கோட்டை. தர்மபுரி பாமகவின் கோட்டை. இந்த மாவட்டத்தில் உள்ள மக்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவர்கள்’’ எனத் தெரிவித்தார்.

ஜி.கே. மணி 25 ஆண்டுகள் பாமக தலைவராக இருந்தவர் ராமதாஸின் நெருங்கிய ஆதரவாளராக இருந்து வருகிறார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்
100 பேர் கூட இல்லாத டாக்டர் ராமதாஸ் டெல்லி போராட்டம்..! ஒங்கும் அன்புமணி கை