
இனிமேல் சட்டமன்ற தேர்தலிலோ வேறு எந்த தேர்தலிலோ போட்டியிடும் எண்ணம் இல்லை. சினிமாவில் மட்டுமே முழு கவனம் செலுத்த உள்ளதாக கருணாஸ் அறிவித்ததால் அவரின் புலிப்படை கட்சி அதிர்ச்சியில் உள்ளது.
திண்டுக்கல் அருகில் உள்ள மாரம்பாடியில் நேற்று நடந்த கோவில் திருவிழாவில் திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தி அவர்; நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில்தான் பிறந்தவன். எனது சமூகத்தை சார்ந்தவர்களுக்காக ஒரு அமைப்பையும் உருவாக்கி இருக்கிறேன். என்னை திருவாடனை தொகுதி சட்டமன்ற வேட்பாளராக ஜெயலலிதா அறிவித்தபோது என்னிடம் காசே இல்லை மொத்தம் இருந்ததே ரூ.1500 மட்டும் தான்.
அம்மா ஜெயலலிதா எனக்கு அளித்த நம்பிக்கை என்னன்னா நீங்க கண்டிப்பாக ஜெயிப்பிங்க என உறுதி அளித்தார். அதன்படி வெற்றிபெறவும் வைத்தார். ஆனால் என்னை வேட்பாளராக அறிவிக்க செய்ததற்கு என்னுடைய இந்த நிலைக்கு காரணமே சசிகலா தான்.
நான் வறுமையில் இருந்த காலத்தில் எனது உறவினர்கள்கூட எனக்கு பெண் தர மறுத்து விட்டனர். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள நிகழ்வுகள் என்னை பெரிதும் பாதித்து வருகின்றன. தற்போது முதல்வராக உள்ள எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மீது மக்கள் முழுமையான நம்பிக்கை வைத்துள்ளனரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இதை ஆர்.கே.நகர் தேர்தலில் ஏற்பட்ட முடிவே பெரும்பாலான அரசியல் கட்சியினரையும் பொதுமக்களையும் சிந்திக்க வைத்துள்ளது என்றார். மேலும் பேசிய அவர் இனிமேல் நான் சட்டமன்ற தேர்தலிலோ வேறு எந்த தேர்தலிலோ போட்டியிடும் எண்ணம் இல்லை. சினிமாவில் மட்டுமே என்னுடைய முழு கவனமும் இருக்கும். தற்போது நான் வகிக்கும் சட்டமன்ற உறுப்பினர் பதவி முடியும் வரை நியாயமாக நடந்து கொள்வேன் ஈவாறு கூறியுள்ளார்.