அம்பலமானது கோஷ்டி மோதல்... பன்னீர் பெயர் பொறித்த கல்வெட்டு உடைப்பு!

 
Published : Jan 19, 2018, 10:29 AM ISTUpdated : Sep 19, 2018, 01:50 AM IST
அம்பலமானது கோஷ்டி மோதல்... பன்னீர் பெயர் பொறித்த கல்வெட்டு உடைப்பு!

சுருக்கம்

Panneerselvam inscription breakthrough at madhurai

இரட்டை இலை சின்னம் கிடைத்ததன் அடையாளமாக மதுரையில் வைக்கப்பட்ட அதிமுக 100 அடி உயர கொடிகம்பத்திலிருந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பெயர் பொறித்த கல்வெட்டு உடைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரட்டை இலை சின்னம், கட்சிக் கொடி ஆகியவற்றை எடப்பாடி - பன்னீர் தரப்புக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், சின்னம் கிடைத்தபின் முதன்முறையாக மதுரையில் அதிமுக சார்பில் முப்பெரும் விழா கடந்த நவம்பர் 25ஆம் தேதி பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. கட்சியின் சின்னம் கிடைத்ததற்காக 100 அடி உயரத்தில் கொடிக்கம்பம் நடப்பட்டது, இதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொள்ளவில்லை. நிகழ்வில் கலந்துகொள்ள பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என்று அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினர். ஆனால், இவர்கள் பன்னீர்செல்வம் எடப்பாடி அணியுடன் இணைவதற்கு முன்பே இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்ததாக காரணம் சொன்னார்கள்.

மேலும், கல்வெட்டில் பன்னீர்செல்வத்தின் பெயர் இடம்பெறாததும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கல்வெட்டில் பன்னீர்செல்வம் பெயர் இடம்பெறாத புகைப்படத்தை பன்னீர் ஆதரவாளர்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவேற்றி தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதனால் அதிர்ச்சி அடைந்த எடப்பாடி பழனிசாமியின் ஆதவாளர்கள் சில மணி நேரத்திலேயே பன்னீர்செல்வம் பெயர் பொறித்த கல்வெட்டு கொடி கம்பத்தின் பக்கவாட்டில் வைத்தனர்.

மேலும் இதற்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கமும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நேற்று முதலமைச்சர் பழனிசாமி பெயர் இடம்பெற்றிருந்த கல்வெட்டு உடையாத நிலையில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பெயர் பொறித்த கல்வெட்டு உடைக்கப்பட்டுள்ளது. உடைத்தது யார் என்று தெரியாததால் போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். பல்வேறு பிரச்சனைகளுக்குப் பின் வைக்கப்பட்ட கல்வெட்டு உடைக்கப்பட்டது பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

விஜய் மக்கள் சந்திப்பு... கரூர்- ஈரோடு கூட்டத்திற்கு இடையே இவ்வளவு மாற்றங்களா..?
டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடுவதா..? எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் பகிரங்க சவால்..!